ஆகஸ்ட் 05, இங்கிலாந்து (World News): இங்கிலாந்து நாட்டில் உள்ள நோர்ஃபோக், அடில்பரோ பகுதியை சேர்ந்தவர் ஜூன் பாக்ஸ்டர் (வயது 83). இவருக்கு கடந்த ஜூன் 29-ஆம் தேதியன்று சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே அதனை சரி செய்ய மருந்து தடவியுள்ளார். இந்த நிலையில் தனியாக இருந்த பாட்டியை காண்பதற்காக அவரது பேத்தி கெய்ட்லான் அல்லின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் தனது நாயையும் உடன் அழைத்து வந்த நிலையில், ஜூன் பாக்ஸ்டரின் காயத்தை அது நக்கியுள்ளது.
பாக்டீரியா தொற்றால் உயிரிழந்த மூதாட்டி :
இதனைத் தொடர்ந்து மூதாட்டியின் உடல்நிலை மோசமாக தொடங்கியதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதனையில் அவரது காயத்தில் பாஸ்டுரெல்லா மல்டோசிடா என்ற பாக்டீரியா இருந்தது தெரிய வரவே, அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனிடையே முன்னதாகவே சிறுநீரக கோளாறு, இதய பிரச்சினை, கல்லீரல் பிரச்சனையுடன் இருந்த ஜூன் பாக்ஸ்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Chennai News: அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்.!
மருத்துவ நிபுணர்கள் விளக்கம் :
இது குறித்து தற்போது மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், "நமது கண்கள், வாய், மூக்கு, முகம் போன்றவை உணர்வுள்ள, ஊடுருவக்கூடிய பகுதிகளாகும். இதனால் அப்பகுதிகளில் நாய்கள் நக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதுபோல சிறிய காயங்களாக இருந்தாலும் நாய்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். மேலும் பாஸ்டுரெல்லா மல்டோசிடா பாக்டீரியாவானது நாய்களின் வாயில் காணப்படும் ஒருவகை பாக்டீரியாவாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மீது ஆபத்தான தொற்றை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.