Man Tracks Down Thief Using Google Maps: கூகுள் மேப்பை பயன்படுத்தி மொபைல் திருடனை பிடித்த நபர்.. அட்டகாசமான தகவல் இதோ..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் இருந்து திருடப்பட்ட அவரது தந்தையின் பை மற்றும் தொலைபேசியை கூகுள் மேப்பைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்.
பிப்ரவரி 05, நாகர்கோவில் (Nagercoil): கூகுளின் மிக சிறந்த மென்பொருள் கூகுள் மேப் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுள் மேப்பின் வருகையால், புதிய இடங்களுக்கு இடையிடையே வழிக்கேட்டு செல்வது மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. மேலும், கூகுள் மேப்பினால் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அத்துடன், நிறைய பேர் தைரியமாக தனியாகவே பயணங்களை மேற்கொள்ளவும் உதவியாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் இருந்து திருடப்பட்ட அவரது தந்தையின் பை மற்றும் தொலைபேசியை கூகுள் மேப்பைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். அவரின் எகஸ் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "எனது தந்தை நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு வண்டியில் (Nagercoil - Kacheguda express) ஸ்லீப்பர் வகுப்பில் சென்று கொண்டிருந்தார். அவர் நாகர்கோவிலிருந்து அதிகாலை 1:43 மணிக்கு ஏறினார். ரயில் காலியாக இருந்துள்ளது. அப்போது என் அப்பாவுடன் ஏறிய மற்றொரு நபர் என் அப்பாவின் பை மற்றும் மொபைல் போனை திருடி, திருநெல்வேலி சந்திப்பில் ரயிலில் இறங்கி உள்ளார்.
அதை உணர்ந்த என் அப்பா, ரயிலில் தேடிப் பார்த்துவிட்டு, தனது நண்பரின் தொலைபேசியில் இருந்து அதிகாலை 3:51 மணிக்கு அவரது போன் திருடப்பட்டதைத் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக, அவரின் மொபைலில் இருப்பிடப் பகிர்வு ஆன் ஆக இருந்தது. அது எனக்கு பகிர்வும் செய்யப்பட்டு இருந்தது. அதன் படி, அதாவது மொபைலின் இருப்பிடத்தை என்னால் கண்காணிக்க முடியும். அதைச் சோதித்தபோது, திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே தண்டவாளத்தில் மொபைல் இருந்தது. Big Discount On Apple iPhone 15: காதலர் தின சிறப்பு.. ஆப்பிள் ஐபோன் விலை குறைப்பு..!
அதன் மூலம் திருடன் வேறு ரயிலில் நாகர்கோவிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் என்பதை கண்டறிந்தேன். இதை மீட்டெடுக்க உதவுவதற்காக எனது நெருங்கிய நண்பரான உள்ளூர் திமுக செயல்பாட்டாளரான பாபினை அழைத்தேன். மேலும் திருடனை பிடிக்க இருவரும் நாகர்கோவில் ஸ்டேஷன் சென்றோம். ரயில்வே காவல் துறையினர் ஒருவர் எங்களுடன் வந்தார்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (Kanniyakumari express) ரயில் நிலையத்திற்கு திருடன் வந்தான், அதில் கூட்டம் அதிகமாக இருந்தது, என்னிடம் இருந்த ஒரே அறிகுறி என் அப்பாவின் தொலைபேசியும் அவரது கருப்பு பையும் மட்டுமே. ரயில் நிலையத்தில் எங்களால் திருடனை பிடிக்க முடியவில்லை. ஆனால் என்னால் இன்னும் அவரைக் கண்காணிக்க முடிந்தது. அவரது அசைவுகளின் அடிப்படையில், அவர் பிரதான வாயில் வழியாக வெளியேறி நாகர்கோவில் ரயில் நிலையத்தை அண்ணா பேருந்து நிலையம் மற்றும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் உள்ளூர் பேருந்தில் சென்றதைக் கண்டு பிடித்தேன். எனவே பைக்கில் துரத்த ஆரம்பித்தோம்.
2-3 நிமிடங்களுக்குப் பிறகு, கூகுள் மேப்ஸ் எனக்கு 2 மீட்டர் துல்லியமான இடத்தைக் கொடுத்தது. அப்போது நான் அவருக்குப் பின்னால் நின்றிருந்தேன். பையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைச் பார்த்தேன், அதில் சிஐடியு என்று அதன் சின்னத்துடன் எழுதப்பட்டிருந்தது. என் அப்பா ஒரு தொழிற்சங்க ஆர்வலர். நானும் எனது நண்பரும் பஸ் ஸ்டாண்டில் திருடனை எதிர்கொண்டோம், பஸ் ஸ்டாண்டில் இருந்த மற்றவர்களின் உதவியுடன் என் அப்பாவின் தொலைபேசி மற்றும் பையை மீட்டோம்.
அவனிடம் இருந்த அனைத்தையும் மீட்டுவிட்டோம் என்று நினைத்தோம். ஆனால் உள்ளூர் காவல் துறையினர் வந்து அவரை விசாரித்தபோது, அவர்கள் மீதமுள்ள மற்ற நபர்களின் பொருட்களைக் கண்டுபிடித்தனர்." என்று அந்த நபர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.