Unity Layoff: 1300 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குகிறது யூனிட்டி நிறுவனம்.. அடுத்தடுத்து தொடரும் வேலையிழப்புகள்.!

கடந்த ஆண்டில் மட்டும் வீடியோ கேம் நிறுவனங்கள் 9000 பேரை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே 1300 பேருக்கான பணிநீக்க தகவல் தெரியவந்துள்ளது.

Unity Technologies Logo (Photo Credit: Wikipedia)

ஜனவரி 09, கலிபோர்னியா (Technology News): சர்வதேச அளவில் ஏஐ எனப்படும் செயற்கைத் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து, தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை அடுத்தடுத்து அதிரடியாக பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு தொழில் நிறுவனங்களும் தங்களால் இயன்ற மாற்று பணியிடங்களில் இயந்திரத்தின் வேலையை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேமிங் நிறுவனமான யூனிட்டியும் (Unity Games) தனது ஒட்டுமொத்த பணியாளர்களில் 25 விழுக்காடு எண்ணிக்கையை குறைப்பதாக அறிவித்துள்ளது. Thanjavur Shocker: காதல் திருமணம் செய்த 3 நாளில் நடந்த கொடூர கொலை: சாதிய பிரச்சனையால் நடந்த பயங்கரம்.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்..! 

யூனிட்டியின் அதிரடி அறிவிப்பு: அதன்படி, சுமார் 1800 பணியாளர்களை புத்தாண்டுக்கு பின் முதல் நிறுவனமாக பணிநீக்கம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். வணிக மறுசீரமைப்பு, லாபகரமான வளர்ச்சி மற்றும் எதிர்காலம் போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த பணி நீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் யூனிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

9000 பேர் பணிநீக்கம்: கடந்த ஆண்டு நவம்பரில் 265 பேரை பணி நீக்கம் செய்த யூனிட்டி நிறுவனம், தற்போது மொத்தமாக ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானவரை பணிநீக்கம் செய்ய தயாராகியுள்ளது. கடந்த ஆண்டை பொறுத்தமட்டில் வீடியோ கேம் சார்ந்த நிறுவனங்கள் மொத்தமாக உலகளவில் 9000 பேரை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் குறித்து சிறுதொகுப்பு: யூனிட்டி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட பல்வேறு வீடியோ கேம்களை நாம் விளையாடி இருப்போம். தயாரிப்பு நிறுவனம் என்ற முறையில் சில நொடிகளே யூனிட்டி என்பது திரையிடப்படும் எனினும், யூனிட்டி கேம்கள் உலகளாவிய வரவேற்பு பெற்றவை. செல்போன்கள், கம்பியூட்டர், பிளே ஸ்டேஷன், இணையவழி விளையாட்டு, மெய்நிகர் தளங்கள் (Virtual Platform) ஆகியவைக்கும் யூனிட்டி கேம் தயாரித்து வழங்குகிறது. கடந்த 2005ம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.