Safe Usage of Water heaters: வீட்டில் வாட்டர் ஹீட்டர் பொருத்துவது பற்றி யோசிக்கிறீர்களா? கட்டாயம் இந்த அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.!
அதனால் அதை பொருத்தும் போதே எச்சரிக்கை எண்ணத்துடன் அடிப்படை விஷயங்களை அறிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும்.
ஆகஸ்ட்18, சென்னை (Technology news): வாட்டர் ஹீட்டர்கள் அறிமுகமான பிறகு பெரும்பாலான வீடுகளில் வெந்நீரில் குளிப்பதென்பது வழக்கமாகிவிட்டது. அதே சமயம் இதில் பிரத்யேகமாக மின்சாரம் பயன்படுத்தப் படுவதனால் கவனம் மிகவும் அவசியமாக இருக்கிறது. வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும்போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து காணலாம்.
வெப்ப நிலை மற்றும் நீர் இருப்பு
வாட்டர் ஹீட்டர் உபயோகத்தின்போது நீர் இருப்பை உறுதி செய்வது மிக மிக அவசியமானதாகும். தண்ணீர் இல்லாத வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும்போது அதில் இருக்கும் ‘எலிமெண்டின்’ வெப்பநிலை அதிகரித்து பழுதடைந்து ‘ஷாக்’ அடிக்கும் அபாயமும் இருக்கிறது. உப்பு அதிகமுள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் ஆறு மாதத்திர்ற்கு ஒரு முறையாவது வாட்டர் ஹீட்டரை பராமரிக்க வேண்டும்.
வாட்டர் ஹீட்டரின் வெப்பநிலை எப்போதும் பாதுகாப்பான மற்றும் வசதியான நிலையில் இருக்க வேண்டும், பொதுவாக 120°F (49°C) இல் பயன்படுத்தும்போது விபத்துகளைத் தவிர்க்கலாம். அதிக வெப்பநிலை தீக்காயங்களை உண்டாக்கும். Guava Fruit Benefits: அடடே.. கொய்யாப்பழம் சாப்பிடுவதில் இவ்வுளவு நன்மைகள் இருக்கா?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!
வயரிங் மற்றும் சுவிட்ச் வகைகள்
வீடுகளில் வயரிங் செய்யும்போது போதுமான சர்க்யூட் பிரேக்கர் (Circuit Breaker) பொருத்துவதன் மூலம் ஒரு சின்ன பகுதியில் ‘எர்த் லீகாஜ்’ (Earth Leakage) ஆனாலும் அங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். வாட்டர் ஹீட்டர் சிறப்பாக செயல் படுவதற்கு முறையான வயரிங் மற்றும் 20 ஆம்பியர் (Ampere) செயல்திறன் கொண்ட சுவிட்ச் வகைகள் அவசியமாகும். ஹீட்டருக்கான சுவிட்ச் எப்போதும் குளியறைக்கு வெளியில் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சோலார் வாட்டர் ஹீட்டர்
கரண்ட் பில் கிடையாது, மின்சாரம் (Electricity) தேவையில்லை, ஷாக் அடிக்கும் அபாயமும் இல்லை என்ற அடிப்படையில் இப்போது பலரும் சோலார் வாட்டர் ஹீட்டர்களின் பயன்பாட்டை தேர்வு செய்கின்றனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பராமரித்தால் போதுமானது என்ற நிலையில் இந்த வகை வாட்டர் ஹீட்டர்களை எளிமையாக வீட்டின் மாடிகளில் அமைத்துக்கொள்ளலாம். மழைக்காலங்களில் தண்ணீரின் வெப்பநிலை குறையுமென்ற நிலையில் மின்சார ஹீட்டர்களில் இருக்கும் எலிமெண்ட் (Element) அமைப்புகளை இதில் பயன்படுத்தலாம்.
வாட்டர் ஹீட்டர்களில் நாம் சாதாரணமாக வீடுகளில் பாத்திரத்தில் உள்ள நீரை சுடவைக்க ஒற்றை அமைப்பு கொண்ட ஹீட்டரை உபயோகம் செய்வோம். இவ்வகை வாட்டர் ஹீட்டர் பயன்படுத்த எளிதானது எனினும், மிகவும் கவனமுடன் கையாள வேண்டிய பொருட்களில் முக்கியமானதாகும். இவ்வகை ஹீட்டர்களை மின்சாரத்துடன் இணைத்து தண்ணீர் சூடாகிவிட்டதா? என்பதை உறுதிசெய்ய நீருக்குள் கைவிட்டால் மின்சார தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம். அதேபோல சிறுகுழந்தைகள் இருக்கும் வீட்டிலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வகை வாட்டர் ஹீட்டரை மின்சாரம் கடத்தும் பாத்திர வகைகளில் நீரை நிரப்பி உபயோகம் செய்தலும் கூடாது.