Guava Fruit (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 17, சென்னை (Health Tips): பழங்கள் நமது உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. கொய்யாவில் (Guava Fruit) பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்சத்து, புரதம், வைட்டமின் சி, பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன.

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரவல்ல பைட்ரோநியூட்ரியன், ஆன்டி-ஆக்சிடன்ட் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய கொய்யாப்பழம் உதவுகிறது.

கொய்யாப்பழத்தில் இருக்கும் நார்சத்து வயிற்றுக்கோளாறு, செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த உதவி செய்கிறது. கொய்யாவை விதையோடு சாப்பிடும் சிலருக்கு வயிற்று வலி வரலாம். ஆகையால் உங்களின் விருப்பத்திற்கேற்ப ஒன்று அல்லது இரண்டு பழங்களை சாப்பிடலாம். Instagram Down Troll Memes: தொழில்நுட்பக்கோளாறை சந்தித்த இன்ஸ்டகிராமை ட்விட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. கலக்கல் சம்பவம் உள்ளே.!

இது மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கவல்லது என்பதால், மச்சிக்கல் உடையோர் கொய்யாவை எடுக்கலாம். இவ்வாறானவர்களுக்கு கனிந்த (பழுத்த) கொய்யா இன்னும் சிறந்தது. வயிற்றில் இருக்கும் கெட்ட வாயு, தேவையில்லாத அமிலத்தன்மை போன்றவையும் சரியாகும்.

வெறும் வயிற்றில் கொய்யாப்பழம் சாப்பிட்டால் மூலப்பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைக்கும். மூலம் சார்ந்த பிரச்சனைக்கு முதல் காரணமே மலச்சிக்கல் தான். ஆகையால் கொய்யா சாப்பிடுவது மலச்சிக்கலை நீக்கி, மூலத்தை தவிர்க்க வைக்கும். கொய்யாப்பழங்களை பகல் மற்றும் மதிய நேரங்களில் மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு நல்லது.