PM Modi Condemns Attack On Slovak PM Robert Fico: ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்..!
ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மே 16, புதுடெல்லி (New Delhi): மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக ஸ்லோவாக்கியா உள்ளது. இந்த நாட்டின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் ஃபிகோ (Slovakian PM Robert Fico). இவர் 4வது முறையாக பிரதமராக உள்ளார். இவர் ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவராக அறியப்படுகிறார். மேலும் நாட்டின் வெளியுறவு கொள்கையை ரஷ்யாவுக்கு ஆதரவாக வகுத்துள்ளதாகவும் ராபர்ட் ஃபிகோ மீது குற்றச்சாட்டு என்பது உள்ளது.
பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: இந்த நிலையில் ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico), இன்று அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பியபோது துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் பலமுறை அவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்.
மறுபக்கம், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Monsoon Forecast 2024: முன்கூட்டியே வரும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு..!
பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்: இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்த பதிவில், “ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி கொண்டேன். இத்தகைய கோழைத்தனமான, கொடூரமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், பிரதமர் ஃபிகோ விரைவில் குணம் பெற வாழ்த்துகிறேன். இத்தருணத்தில் ஸ்லோவாகியா குடியரசு மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.