3 Black People Killed: இனவெறியால் மூவர் சுட்டு கொலை: அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாகாணத்தில் நடந்த பயங்கரம்.!
மேலும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆகஸ்ட் 28, ஜாக்சன்வில்லே (World News): சுமார்20 வயதுள்ள இளைஞர் ரியான் கிறிஸ்டோபர் (Ryan Christopher Palmeter) என்பவர் ஃப்ளோரிடா (Florida) மாகாணத்தின் ஜாக்சன்வில்லே (Jacksonville) பகுதியில் உள்ள கடையொன்றில் நுழைந்து அங்கே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை சுட்டுக்கொன்றார். துப்பாக்கியால் சுட்ட நபர் வெள்ளை இனத்தவர் என்றும் கொள்ளப்பட்ட மூன்று பேரும் கருப்பினத்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பேசிய ஃப்ளோரிடா மாகாணத்தின் ஆளுநர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இனவெறியால் தூண்டப்பட்டவர் என்றும் அவர் கருப்பின மக்களை குறிவைத்து தாக்கியதாகவும் கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் டெக்ஸாஸ் (Texas) மாகாணத்தின் க்ளே கவுண்டியில் (Clay County) தனது பெற்றோர்களுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. Attack on Dalit People: திருட்டு சந்தேகத்தில் தலித் இளைஞர்களை தலைகீழாக கட்டிவைத்து அடித்து கொடுமை செய்த உயர்சாதி கூட்டம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
ஏற்கனவே இந்த பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மற்றொரு இனவெறி தாக்குதலுக்காக, ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் மிகுந்த வருத்தத்துடன் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள், இந்த சம்பவத்திற்கும் சேர்த்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரார்த்தனை செய்தனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 28,000 பேர் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கே கருப்பின மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் தொடர்கதையாக இருக்கிறது. கடந்த ஆண்டு நியூயார்க் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.