Snips from Video (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 28, அஹ்மத் நகர் (Trending Video): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத் நகர் மாவட்டம் (Ahmednagar, Maharashtra), ஸ்ரீராம்பூர் தாலுகா, ஹரேகான் கிராமத்தில் வசித்து வருபவர் ஷுபம் மாகடே. இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

சம்பவத்தன்று, தனது நண்பர்கள் 4 பேருடன் அங்குள்ள பகுதிகளில் வளர்த்து வந்த ஆடு, புறா ஆகியவற்றை இவர்கள் பிடித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் உள்ளூரை சேர்ந்த பிற சமூக மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து யுவராஜ் கலண்டே, மனோஜ் போடாகே, பப்பு பார்ஹே, தீபக் காய்க்வாட், துர்கேஷ் வைத்யா, ராஜு போராஜ் ஆகியோர் சேர்ந்து ஷுபம் மற்றும் அவரின் நண்பர்கள் வீட்டிற்கு சென்று அனைவரையும் தங்களின் விவசாய நிலத்திற்கு அழைத்து வந்துள்ளனர். Sivakarthikeyan At Kavin Reception: புதுமணத்தம்பதிகள் கவின் – மோனிஷாவை நேரில் சென்று வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்.!

அங்கு அனைவரையும் மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்ட நிலையில், சிறுநீர் கழித்தும் கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் கடந்த ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக வீடியோவும் வெளியாகி வைரலாக, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்ட்டவர்களில் ஷுபத்தின் புகாரை ஏற்று 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்களில் ஒருவர் கைதாகிவிட, எஞ்சிய ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டதால், அவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பகீர் சம்பவத்தின் பதைபதைப்பு விடியோவும் வெளியாகி இருக்கிறது.