Four People Drown At Phillip Island Beach: ஆஸ்திரேலியாவில் பரபரப்பு... 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பிலிப் தீவு கடற்கரையில் மூழ்கிய விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜனவரி 25, ஆஸ்திரேலியா (Australia): ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பிலிப் தீவில் (Phillip Island) கடலில் மூழ்கி நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக கான்பெர்ராவில் உள்ள இந்திய அரசின் தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், “ஆஸ்திரேலியாவில் இதயத்தை உடைக்கும் சோகம் ஒன்று நடந்துள்ளது. விக்டோரியாவில் உள்ள பிலிப் தீவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள இந்திய அரசின் குழு, இறந்தவர்களின் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. Taping Fish To ATMs: ஏடிஎம்களில் மீன்களை செல்லோ டேப் போட்டு ஒட்டும் நபர்கள்.. சிறார்களின் அட்டகாசம்..!
விக்டோரியா பிலிப் தீவு கடற்கரையில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இவர்கள் குளித்த போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.