US Sanction Over Russia: அலெக்சி நாவல்னி மரணம்; ரஷியாவின் மீது கூடுதலாக 500 பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா..!

உலகளவில் ரஷியாவின் மீது அமெரிக்கா பனிப்போரை ஈடுசெய்யும் வகையில் உக்ரைன் பிரச்சனையை காரணம் காட்டி பொருளாதார தடைகள் விதிப்பு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டாலும், ரஷியாவை அது பெரிதாக பாதிப்பது இல்லை.

Vladimir Putin (Photo Credit: Instagram)

பிப்ரவரி 24, வாஷிங்க்டன் (World News): பிராந்திய பாதுகாப்பு கருதி தன்னிடம் உக்ரைன் நாட்டுக்கு ரஷியா (Russia) அழுத்தம் தந்து வந்த சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) இங்கிலாந்து தலைமையிலான நேட்டோ (NATO) நாடுகளுடன் இணைய முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) உத்தரவின் பேரில் உக்ரைன் மீது 2021ல் பிப்ரவரி மாதம் முதல் படையெடுப்பை தொடங்கியது. உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் தாக்கப்பட்டன. இந்த போர் ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை நடந்து வருகிறது. Tractor Overturned: குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து… 8 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி., மாசி மகத்துக்கு நீராட சென்றவர்கள் மரணம்.! 

அலெக்சி நாவல்னியின் (Alexi Navalny) மரணம்: இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி சிறையில் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. ரஷியாவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட அலெக்சி, ரஷிய அதிபரான விளாடிமிர் புதினை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். இதனால் உள்நாட்டில் தேசவிரோதி என அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து & அமெரிக்காவிடம் தஞ்சமும் புகுந்தார். 2021ல் அவர் கைது செய்யப்பட்டு ரஷிய சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் அவர் சிறையில் உயிரிழந்தார். TV Anchor Kidnaped for Marriage: பிரபல தனியார் டிவி தொகுப்பாளர் மீது ஒருதலைக்காதல்; இளைஞரை கடத்தி திருமணத்திற்கு முயற்சித்த இளம்பெண் கைது.! 

US President Joe Biden (Photo Credit: @TheInsiderPaper X)

ரஷியா மீது கூடுதலான பொருளாதார (US Sanction Against Russia) தடைகள்: இந்த விவகாரம் உலக நாடுகளில் அலெக்சியை ஆதரித்த நாடுகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. ஏற்கனவே ரஷியாவின் மீது உக்ரைன் நாட்டில் நடத்தப்படும் போர்முனை தாக்குதலால் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழும் என அமெரிக்கா எதிர்பார்த்த நிலையில், ரஷியா தனது சுயசார்பு மற்றும் கூட்டணி நாடுகளின் உதவியுடன் அதனை திறம்பட கையாண்டு வருகிறது. இந்நிலையில், அலெக்சியின் மரணத்திற்கு ரஷியா காரணம் என குற்றசாட்டை முன்வைத்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது கூடுதலாக 500 பொருளாதார தடையை விதித்துள்ளது. இவற்றில் 100 தடைகள் சீனா, அரபு அமீரகத்தில் இருந்து ரஷியாவுக்கு செல்லும் உதவிகள் என்றும் கூறப்படுகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement