White House Confirms Houthi Against Attack: ஹவுதிக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்; வெள்ளை மாளிகை அறிவிப்பு.!
அதனை அவ்வப்போது அதிகரிக்கும் வகையில் ஆயுதமேந்திய குழுவும் செயல்பட்டு வருகிறது.
ஜனவரி 20, செங்கடல் (Red Sea): மத்திய கிழக்கு நாடுகளில் (Middle East Countries) பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் (Israle Palestine War) போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியதால், மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிரான நாடுகள் அனைத்தும் பாலஸ்தீனியத்தைச் சார்ந்த ஹமாஸ் குழுவினருக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: அமெரிக்கா போரின் தொடக்கத்தில் செங்கடல், மத்திய கிழக்கு வளைகுடா கடலில் தனது இராணுவ விமானம் தாங்கி கப்பலை பாதுகாப்புக்காக அனுப்பி வைக்க, அங்கு போர் புதிய வேகம் எடுத்தது. ஏமன் நாட்டின் கிளர்ச்சிப்படையான ஹவுதி கிளர்ச்சியாளர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு செங்கடல் வழியாக செல்லும் வணிகப்பல்களை தாக்கி சிறைபிடிக்க தொடங்கினர். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதால் செங்கடல் பகுதியில் வரும் அமெரிக்க வணிக கப்பல்கள் மற்றும் இஸ்ரேல், அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான கப்பல்கள் தாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. JAXA Lunar Mission: இறுதிக்கட்ட நேரத்தில் நிலவு ஆராய்ச்சியில் தோல்வியை சந்தித்த ஜப்பான்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஹவுதிக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்கா: அதன்படி, திரைப்பட பாணியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டரில் சென்று ஜப்பானிய கப்பல் ஒன்றை கடத்திய சம்பவமும் நடந்திருந்தது. சமீபத்தில் அமெரிக்காவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கி அளிக்கப்படவே, அமெரிக்கா தற்போது செங்கடல் பகுதியில் தனது பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஹவுதிக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது உலகளாவிய பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது. ஹவுதிக்கு ஆதரவான நிலைகள் அனைத்தும் அமெரிக்காவால் குறிவைத்து தாக்கப்படுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சொந்தமான கப்பல் தாக்கப்பட்டபோது: