ஜனவரி 20, டோக்கியோ (Tokyo): ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (JAXA) ஜாக்சாவின் சார்பில், நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்காக சிலிம் (SLIM) செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் 'மூன் ஸ்னைப்பர் ரோபோ எக்ஸ்ப்ளோரர்' என்ற முறையில் நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
வெற்றிகரமாக தரையிறங்கியது: இந்த விண்கலம் விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதனால் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலவு ஆராய்ச்சிக்கான பட்டியலில், ஜப்பான் தனக்கான இடத்தினை மீண்டும் உறுதி செய்தது. செயற்கைகோள் நிலவில் தாயியிறங்கியதும், விண்கலத்தில் இருக்கும் லேண்டர் நிலவுக்குள் சென்று தனது செயல்பாடுகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Harbhajan Singh About Ram Mandir: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: மனம் திறந்த ஹர்பஜன் சிங்.. நெகிழ்ச்சி பேச்சு.!
தரையிறங்கியபின் தோல்வி: ஆனால், லேண்டர் தனது கலத்தில் இருந்து பிரிந்துசெல்ல முயற்சித்தபோது மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நின்றது. லேண்டர் இயங்க இயலாமல் நின்றாலும், தொடர்ந்து அதன் சமிக்கைகள் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி செயலிழப்பு: கடந்த வெள்ளிக்கிழமை காலை 10:20 மணிக்கு பின்னர் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிலையில், அதன் பேட்டரியில் அதிக சக்தியை சேமித்து செயல்படுத்த இயலவில்லை. இந்த கோளாறு காரணமாக குறைந்தபட்ச வெற்றியை அடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த கட்ட முயற்சி தொடரும் என்றும் கூறுகின்றனர்.