Instagram Famous Died: 19 வயதில் இப்படி நடக்கணுமா?.. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 நாளில் இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் மரணம்.!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு கல்லீரல் தொற்று இருப்பது தெரியவந்த நிலையில், மாற்று கல்லீரல் பொருத்தப்பட்டும் காலம் அவரை ஆட்கொண்ட சோகம் குடும்பத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Maria Sofia Valim (Photo Credit: Instagram)

டிசம்பர் 12, பிரேசில் (World News): பிரேசில் நாட்டில் உள்ள சாரா மாகாணம், கவுசியா நகரின் மேயராக பதவி வகித்து வருபவர் விடோர் வாலிம். இவருக்கு 19 வயதுடைய மரியா சோபியா வாலிம் (Maria Sofia Valim) என்ற மகள் இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதானமான நபராக அங்கு அறியப்படுகிறார். மேலும், வழக்கறிஞரும் ஆவார்.

மருத்துவமனையில் அனுமதி: இவருக்கு சமீபத்தில் கல்லீரல் தொடர்பான (Instagram Famous Died After Liver Transplant Surgery) பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: கல்லீரலை தானமாக பெறுவதற்கு பல முயற்சிகள் எடுத்தும் அவருக்கு கிடைக்கவில்லை. இறுதியாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லீரல் தானம் செய்த ஒருவரால் சோபியாவுக்கு கல்லீரல் கிடைத்தது. இதனால் அவர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. Online Order Shocker: ஆன்லைனில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருளை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் மோசடி?.!

Maria Sofia Valim (Photo Credit: Instagram)

அறுவை சிகிச்சை வெற்றியடைந்த 2 நாட்களில் சோகம்: மருத்துவர்களும் கல்லீரல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த நிலையில், 2 நாட்களில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பொருத்தப்பட்ட மாற்று கல்லீரலை சோபியாவின் உடல் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மீளாத்துயரில் உறவினர்கள், நண்பர்கள்: இவரின் மறைவு பலரையும் சோகத்திற்குள்ளாக்கி இருக்கிறது. அவரது பின்தொடர்பாளர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோபியாவின் மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்து வருகின்றனர்.