Couple Fight / Instagram (Photo Credit : Freepik / Pixabay)

ஆகஸ்ட் 29, காசியாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் (Ghaziabad) உள்ள லோனியில் வசித்து வருபவர் ஷாநவாஸ். இவர், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) தனது 2 குழந்தைகளுடன் காவல்நிலையத்திற்கு சென்று காவல் ஆணையர் முன் கதறி அழுதார். தனது மனைவி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் (Reels Video) மீதான மோகத்தால், எனக்கும் என் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் தனது மனைவி மீது குற்றம் சாட்டினார். Viral Video: குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற கோழிகள்.. வைரல் வீடியோ உள்ளே..!

பரபரப்பு புகார்:

இதுகுறித்த புகாரில், தனது மனைவி இன்ஸ்டாகிராமில் லைக்குகள் மற்றும் பின்தொடர்பவர்களுக்காக சமூக ஊடகங்களில் மற்ற ஆண்களுடன் ஆபாச ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிடுவதாக அவர் கூறினார். இதனை எதிர்ப்பு தெரிவிக்கும்போது நிகழும் சண்டையின் வீடியோவை பதிவு செய்து அதையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுகிறார். சில நேரங்களில், பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டும் ரீல்ஸ் வீடியோ எடுக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, தனது மனைவி கத்தியால் தாக்கியபோது, இன்னும் நிலைமை மோசமடைந்தது.

மனைவி மீது புகார் அளித்த கணவர்:

இச்சம்பவத்தின் காணொளியை காவல் ஆணையரிடம் காட்டிய ஷாநவாஸ், தனது மனைவியால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஆபத்து இருப்பதாக கூறினார். தனது மனைவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.