ஆகஸ்ட் 25, ரியோ கிராண்டே டோ சுல் (World News): பிரேசில் நாட்டில் வழக்கறிஞரான லெட்டிசியா பால் (வயது 22) என்ற இளம்பெண், மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்கும்போது, காண்ட்ராஸ்ட் ஏஜெண்டால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இவர், லோன்ட்ராஸில் சட்டப் பட்டப்படிப்பு முடித்துள்ளார். சட்டம், ரியல் எஸ்டேட்டில் முதுகலைப் படிப்பையும் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு 'அனாபிலாக்டிக் ஷாக்' (Anaphylactic Shock) என்ற கடுமையான ஒவ்வாமை பாதிப்பு இருந்தது. படுத்த படுக்கையாக கணவர்.. மனைவியின் விபரீத செயல்.. துள்ளத்துடிக்க நடந்த கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!
வழக்கறிஞர் பெண் பலி:
இவர், வழக்கமான பரிசோதனைக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அனாபிலாக்டிக் ஷாக் ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், அனாபிலாக்டிக் ஷாக் என்பது ஒரு திடீர், உயிருக்கு ஆபத்தான கடுமையான ஒவ்வாமை எதிர்வினை ஆகும். சுவாசிப்பதில் சிரமம், தொண்டையில் வீக்கம் மற்றும் ரத்த அழுத்தம் குறைதல் போன்ற அறிகுறிகளால் நிகழும். சுமார் 5000 பேரில் 1 அல்லது 10,000 பேரில் 1 நபருக்கு தான் ஏற்பட வாய்ப்புள்ளது. கதிரியக்கவியல் நிபுணர் மருத்துவர் முரிலோ யூஜெனியோ ஒலிவேரா கூறுகையில், கான்ட்ராஸ்ட் ஏஜெண்ட்கள் பொதுவாக பாதுகாப்பானவை என்றாலும், இந்த கடுமையான எதிர்வினைகள் மிகவும் அரிதானவை என தெரிவித்தார். இதனால், பிரேசில் வழக்கறிஞர் தனது 22 வயதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.