Flight Service Cancelled Due To Heavy Rain: கனமழை காரணமாக விமான சேவை ரத்து - பயணிகள் அவதி..!

Australia Rains (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 06, கான்பெரா (World News): ஆஸ்திரேலியா நாட்டில் புயலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. Girl Saves Sister Life Using Alexa: தங்கையை தாக்க வந்த குரங்கை, அலெக்ஸ்சாவால் தலைதெறிக்க ஓடவைத்த சிறுமி; பாராட்டுதலை பெரும் சாதுர்ய நடவடிக்கை.!

கனமழை பெய்துவரும் நிலையில், மோசமான வானிலை நிலவுவதால் (Due To Inclement Weather) சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரெட்பெர்ன் ரயில் நிலையத்தில் கனமழை காரணமாக பொருட்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். தொடர் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.