ஏப்ரல் 06, பாஸ்தி (Basti): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாஸ்தி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி நிகிதா. இவர் நேற்று தனது வீட்டில் அம்மா, தங்கை ஆகியோருடன் இருந்துள்ளார். இவர்கள் வசித்து வரும் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகம் என்பதால், வீடு முழுவதும் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு இருக்கும். சிலநேரம் வீட்டின் கதவு திறந்திருந்தால், வீட்டிற்குள் வரும் குரங்குகள் உணவுகளை சாப்பிட்டும், பாத்திரங்களை தூக்கி எரிந்தும் அட்டகாசம் செய்யும்.

வீட்டிற்குள் புகுந்த குரங்கு: சம்பவத்தன்று நிகிதாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அதற்காக வீட்டின் கதவை திறந்தவர்கள், மீண்டும் அதனை அடைக்க மறந்துவிட்டனர். இதனால் வீட்டிற்குள் புகுந்த குரங்கு ஒன்று, சமையல் அறையில் பாத்திரங்களை உறுதியுள்ளது. அங்கு நிகிதாவின் இளம் சகோதரி இருந்துள்ளார். சிறுமி குரங்கை பார்த்து அலறியுள்ளார். Lightning Strikes Liberty Statue: அம்மாடியோவ்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்; அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையில் தாக்கிய மின்னல்.! 

அலெக்ஸ்சா வாயில் அசிஸ்டன்ட்: குரங்கு தன்னை தாக்க வருகிறார்களோ என சிறுமி நோக்கி வர, அங்கு இருந்த நிகிதா தனது தங்கையை காப்பாற்ற சாதுர்யமாக யோசனை செய்து செயல்பட்டுள்ளார். அங்கு அமேசான் நிறுவனத்தின் வாயிஸ் அசிஸ்டன்ட் அலெக்ஸ்சா இருந்த நிலையில், உடனடியாக நாய்களை போல குறைக்குமாறு நிகிதா உரக்க கூறியுள்ளார்.

நாய் சத்தம் கேட்டு ஓடிய குரங்கு: அலெக்ஸ்சா உடனடியாக தனது பணியை செய்துவிட, குரங்கு நாய் வந்துவிட்டது என பதறியபடி வீட்டின் வெளியே ஓட்டம் பிடித்துள்ளது. இதனால் மகிழ்ந்துபோன சிறுமியை குடும்பத்தினர் வெகுவாக பாராட்டினார். தற்போது இந்த தகவல் ஊடகங்களுக்கு செய்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் சாதுர்ய செயல் அவரது தங்கையை குரங்கு தாக்குதலில் இருந்து காப்பாற்றி இருக்கிறது.