Suicide Bomb Attack On Chinese Engineers: தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலி - பாகிஸ்தானில் பயங்கரம்..!

Fire Explosion (Photo Credit: Pixabay)

மார்ச் 26, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் (Suicide Bomb Attack in Pakistan) நடத்தியுள்ளனர். சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்க வைத்துள்ளார். Bus Driver – Conductor Fight: அரசு பேருந்து ஓட்டுநரை நடுரோட்டில் அடித்து தாக்குதல் – தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் அத்துமீறல்..!

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 5 பேர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வாகன ஓட்டுநர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த வாகனத்தில் சென்ற சீன பொறியாளர்கள் அனைவரும் அணை கட்டுமானத்திற்காக சென்றுள்ளனர். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, கடந்த 2021-ஆம் ஆண்டும் தசு பகுதியில் பேருந்தில் நடந்த குண்டு வெடிப்பில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.