மார்ச் 26, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சாவூருக்கு சென்றுள்ளது. செல்லும் வழிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும் இடையே போட்டி நிலவி உள்ளது. The Girl Died Taking Expired Fever Medicine: காய்ச்சல் மருந்தை குடித்த சிறுமி பலி – உறவினர்கள் சோகம்..!
இதனையடுத்து, அரசு பேருந்து தஞ்சை தொம்பன் குடிசை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை வழிமறைத்து நிறுத்தியுள்ளனர். உடனே தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி வந்து அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்துள்ளனர்.
திடீரென, அரசு பேருந்து ஓட்டுநரை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சேர்ந்து அவரை அடித்து தாக்கியுள்ளனர். இதனால் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சேர்ந்து அரசு பேருந்து ஓட்டுநரை நடுரோட்டில் அடித்து தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.