Killed Wife And Children With Axe: பாகிஸ்தானில் கொடூரம்; மனைவி, 7 குழந்தைகள் கோடாரியால் வெட்டிக்கொலை..!

Murder | crime file pic (Photo Credit: pixabay)

ஏப்ரல் 13, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணம், அலிபூரை சேர்ந்த தம்பதி சஜ்ஜத் கோகர்-கவுசர் (வயது 42). இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 8 மாதம் முதல் 10 வயதுடைய குழந்தைகள் ஆவர். சஜ்ஜத் கூலி வேலை செய்து வரும் நிலையில், போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் அவரால் குடும்பத்தை வழிநடத்த முடியவில்லை. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டுள்ளது. Two Childrens Stoned To Death: கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்; 2 குழந்தைகள் அடித்துக்கொலை – கள்ளக்காதலன் வெறிச்செயல்..!

இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சஜ்ஜத், வீட்டில் இருந்த கோடாரியை கொண்டு தனது மனைவியை வெட்டிக் கொன்றுள்ளார். மேலும், அவருடைய 7 குழந்தைகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், தனது மனைவி மற்றும் 7 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சஜ்ஜத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் என்று பாராமல் இரக்கமின்றி கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.