Australian Man Killed By Crocodile: மனைவியின் உயிரை காப்பாற்றிய கணவர்; ஆற்றில் முதலை கடித்து உயிரிழப்பு..!
ஆஸ்திரேலியாவில் மருத்துவர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து, முதலையிடம் கடிபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 08, குயின்ஸ்லாந்து (World News): ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தை (Queensland) சேர்ந்த மருத்துவர் டேவிட் ஹேக்பின் (வயது 40). இவர் தனது மனைவி ஜேன் மற்றும் 3 குழந்தைகளுடன், கடந்த ஆகஸ்ட் 03-ஆம் தேதி அன்று, அன்னான் ஆற்றிற்கு (Annan River) சென்றுள்ளார். அங்கு 50 அடி உயர ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பகுதி சரிந்து அதில் டேவிட் தவறி கீழே விழுந்தார். அவரது மனைவி காப்பாற்ற முயன்றபோது, டேவிட் அவரது கையை தவிர்த்து விட்டு அவர் ஆற்றில் விழுந்தார். Controversial Bill In Iraq: பெண்களுக்கான திருமண வயது இனி 9.. ஈராக் பாராளுமன்றம் அறிவிப்பு..!
இதனையடுத்து, அந்த ஆற்றில் இருந்த முதலை (Crocodile) அவரை கடித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 2.5 மைல் தொலைவில் உள்ள ஓடையில் 16 அடி நீளமுள்ள முதலையை வனவிலங்கு காப்பாளர்கள் கருணைக்கொலை செய்தனர். அதன் உள்ளே இருந்த மனித எச்சங்கள் டேவிட் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.