ஆகஸ்ட் 08, பாக்தாத் (World News): கடந்த 1979-ம் ஆண்டு நடந்த இஸ்மிய புரட்சியைத் தொடர்ந்து ஈரானில் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்தது. இதையடுத்து மக்கள் தொகையை குறைக்கும் பொருட்டு 1990-களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படு்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஈரானின் மக்கள் தொகை பெரிதும் குறைந்தது. இதனை சரி செய்யும் விதமாக ஆண்களின் திருமண வயதை 20 ஆகவும், பெண்களின் திருமண வயதை 16, 17 ஆகவும் ஆக்குகிறோம் என 2010ல் அப்போதைய அதிபர் அகமதிநிஜாத் அறிவித்தார். அதேபோல் ஈராக்கில், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 18. இருப்பினும், பெற்றோர் அல்லது நீதித்துறை சம்மதத்தில், குடும்பங்களுக்கு 15 வயதில் பெண்களை திருமணம் செய்யும் உரிமையை வழங்க முடியும். Japan Earthquake: அதிர்ந்தது ஜப்பான்; குலுங்கிய கட்டிடங்கள்.. பயங்கர நிலநடுக்கம்., சுனாமி எச்சரிக்கை.!
இந்நிலையில் ஈராக் பாராளுமன்றம் பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை (Controversial Bill) அறிவித்துள்ளது. இது ஒன்பது வயது சிறுமிகளுக்கும் பதினைந்து வயதுள்ள ஆண் குழந்தைகளுக்கும் திருமணத்தை அனுமதிக்கிறது. தற்போதைய முன்மொழியப்பட்ட மசோதா, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையின் எந்தவொரு நடைமுறையையும் குற்றம் எனக்கூறிய சுயேச்சை எம்.பி ரேட் அல்-மலிகி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த மசோதாவினை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.