UK Election 2024: பிரிட்டன் பொதுத் தோ்தல்.. ஆட்சியைப் பிடிக்க போவது யார்?.!

பிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

UK Election (Photo Credit: @ndtv X)

ஜூலை 04, லண்டன் (World News): பிரிட்டன் நாட்டு மக்கள் தங்களின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க இன்று வாக்களிக்கப் போகிறார்கள் (UK Election). எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைவர், அமையவிருக்கும் புதிய அரசுக்கு தலைமை தாங்குவார். இந்தியாவைப் போன்றே பிரிட்டனிலும் பிரதமர் தான் அரசாங்கத்தை வழிநடத்துபவர். சில அதிகாரங்கள் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றுக்கு பிரித்து வழங்கப்பட்டிருந்தாலும், அரசு கொள்ளைகளை மற்றும் முடிவுகளுக்கு பிரிட்டன் பிரதமரே இறுதியாக பொறுப்பாவார். Ather Rizta Deliveries Begin: ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டெலிவரி பணிகள் ஆரம்பம்..!

பிரிட்டன் பொதுத் தோ்தல்: பிரிட்டன் நாட்டில் வாக்குச் சீட்டு முறையிலே தேர்தல் நடைபெறும். யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். அங்குள்ள 650 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். அங்கு இந்த முறை கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. பிரிட்டனில் வாக்குப்பதிவு முடிந்து உடன் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும்.