Russian invasion of Ukraine ending in 2024: அமெரிக்கா-ரஷ்யா-இந்தியா தேர்தல்.. உக்ரைன் தலையெழுத்தை மாற்றப்போகும் தேர்தல்..!
அமெரிக்க, ரஷ்ய அதிபர் தேர்தலை முன்னிட்டு ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்தம் அமலுக்கு வர போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
டிசம்பர் 29, வாஷிங்டன் (Washington): இரண்டு உலக வல்லரசு நாடுகளில் அடுத்த ஆண்டு நடக்க போகும் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் அந்த தேர்தல் மூலம் மீண்டும் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் (உக்ரைன்) அமைதி திரும்பும் எனவும், காசா- இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும் என உலக அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறி வருகின்றனர்.
இரண்டாம் உலக்கபோருக்கு முன் விவசாயிகளாக வாழ்ந்து வந்த ஒன்றினைந்த சோவியத் மக்கள், ஹிட்லரின் படையெடுப்புக்கு பின் உலகின் முன்னனி ராணுவமாகவும், வல்லரசு நாடாகவும் திகழ்கிறது ரஷ்யா. இந்நிலையில் 2022ம் ஆண்டு உக்ரைன் நோட்டோவுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா. உக்ரைன் மீது போர் தொடுத்தது. போரில் உக்ரைன் கை ஓங்க வேண்டும் என்றும் ரஷ்யா இனி எழும்பவே கூடாது என்ற நோக்கில் உக்ரைனுக்கு புது புது ஆயுதங்களை அள்ளி வழங்கியது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள். Ronaldo Workout: தீவிர உடற்பயிற்சியில் மும்மரமாக ரொனால்டோ; லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.!
இதனைதொடர்ந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சி அமைக்ககூடும் என்றும், அவர் அதிபராக வரும் பட்சத்தில் ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வரக்கூடும் என்றும், காசா- இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் தேர்தல்: இந்நிலையில் ரஷ்யாவின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெற உள்ளது. ரஷ்யாவில் சுமார் 25 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வரும் புதின் இந்த அதிபர் தேர்தலில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். அதற்கு வசதியாக, ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தின் கீழ் அவரால் மேலும் 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகத் தொடர முடியும். Prasanth Narayanan Passed Away: பிரபல நாடக இயக்குனர் பிரசாந்த் நாராயணன் மறைவு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
அமெரிக்க தேர்தல்: மறுபக்கம் அமெரிக்க அதிபர் தேர்தல் ஆனது 2024 நவம்பர் 5-ம் தேதி, நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை பின்னுக்குத் தள்ளி முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால் ரஷ்ய உக்ரைன் போர் நிறுத்தம் நிரந்தரமாக கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் அமெரிக்க வரலாற்றில் ட்ரம்ப் அதிபராக இருந்த பொழுது மட்டுமே எந்த ஒரு போரும் நடக்கவில்லை. அதுமட்டுமின்றி புதின் மற்றும் ட்ரம்ப் வெற்றி பெறும் பொழுது, கண்டிப்பாக இருவரும் இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. அதேவேளையில் மோடி தலைமையிலான இந்தியா அரசு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவிலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.