Google More Layoffs: கூகுள் பணி நீக்கம் தொடக்கம்... சுந்தர் பிச்சையின் அதிரடி..!
கூகுள் நிறுவனத்தில் மிகப்பெரிய பணி நீக்கம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி 18, அமெரிக்கா (America): 2024 ஆம் ஆண்டு ஆரம்பமே ஐடி ஊழியர்களை திண்டாட ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் தான் அமேசான் நிறுவனம் அதன் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் தனது பணி நீக்கத்தினைக் குறித்து அறிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டுமே கூகுள் (google) நிறுவனம் 12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடங்கி ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் 7,500 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Hackers Targeting Indian Govt- Cyber-Espionage Campaign: ரகசிய ஆவணங்களை திருட... இந்திய அரசாங்கத்தை குறிவைக்கும் ஹேக்கர்கள்..!
இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் கூறியதாவது, இந்த பணி நீக்கத்தின் மூலம் நிறுவனத்தில் செயல்படும் அணிகளின் எண்ணிக்கை மற்றும் அணி உறுப்பினர்களின் எண்ணிக்கை மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். மேலும் இது ஒரு கடினமான முடிவாகும். அதேநேரம் அவசியமான முடிவாகும்." என்று கூறியிருந்தார். கூகுள் மற்றும் அமேசான் போன்ற உலகளாவிய பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் ஜனவரி 2024 ல் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும் பணியமர்த்தியுள்ளன. மேலும் அமேசான் மற்றும் கூகுள் இரண்டும் செயற்கை நுண்ணறிவில் (AI) பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.