Hacker File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 18, புதுடெல்லி (New Delhi): ரகசிய ஆவணங்களை திருடுவதற்காக இந்திய அரசாங்கத்தில் உள்ள பல்வேறு நபர்களை ஹேக்கர்கள் (Hackers) குறி வைத்துள்ளனர். அதற்காக சைபர் உளவு பிரச்சாரம் ஆப்பரேஷன் ரெஸ்டிக் வெப் (Operation Rustic Web) கையாண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பிரச்சாரம் ஆனது முதன் முதலில் அக்டோபர் 2023 லிளேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மால்வர் மற்றும் என்கிரீட் செய்யப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹேக் செய்வதாக Quick Heal நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் அதிநவீன கோப்புகளை திருடுவது மட்டுமல்லாமல் கணினி தகவல்களையும் சேகரித்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. Sachin Tendulkar Deepfake Case: சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ... காவல்துறையினர் அதிரடி..!