TikTok Star and Executioner Shahjahan Bouya Dies: கொலையாளிகளை தூக்கிலிட்ட டிக்டாக் நட்சத்திரம் ஷாஜகான் பௌயா.. நெஞ்சு வலியால் மரணம்..!

வங்கதேச சிறையில் தொடர் கொலையாளிகளை தூக்கிலிட்ட டிக்டாக் நட்சத்திரமும், மரணதண்டனை நிறைவேற்றுபவருமான ஷாஜகான் பௌயா, நெஞ்சு வலியால் மரணமடைந்தார்.

Shahjahan Bouya (Photo Credit: @tbsnewsbd X)

ஜூன் 25, டாக்கா (World News): தொடர் கொலையாளிகள் மற்றும் அரசியல்வாதிகளை என பலரை வங்கதேச சிறையில் தூக்கிலிட்டு, அதைப் பற்றி புத்தகம் எழுதிய வங்காளதேசத்தின் கொடிய மரணதண்டனை நிறைவேற்றுபவர் தான் ஷாஜகான் பௌயா. இவர்க்கு வயது 74. இவர் நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்தார். இந்நிலையில் இவர்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைபலனின்றி இன்று உயிரிழந்தார். மரணதண்டனை நிறைவேற்றுபவராக தன்னார்வத் தொண்டு செய்வதன் மூலம் தனது சிறைக் காலத்தை 10 ஆண்டுகள் குறைந்தவர் தான் ஷாஜகான் பௌயா. UP Man Forced to Have Sex Change Surgery: ஆணின் மீது ஆணுக்கு காதல்.‌. அந்தரங்க உறுப்பை அறுத்து காதலன் செய்த கபளீகரம்.. பகீர் சம்பவம்..!

இவர் வங்கதேசத்தின் தற்போதைய பிரதமரின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொன்ற குற்றத்திற்காக சில இராணுவ அதிகாரிகளை தூக்கிலிட்டார். மேலும் அரசியல்வாதிகளான அலி அஹ்சன் முஜாஹித் மற்றும் சலாவுதீன் குவாடர் சௌத்ரி, தொடர் கொலையாளி எர்ஷாத் ஷிக்தர் ஆகியோரை தூக்கிலிட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இவரது அனுபவங்களைப் பற்றிய புத்தகம், தூக்கில் தொங்கும் நடைமுறை பற்றிய விளக்கம் உட்பட, வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷாஜகான் பௌயா அவரை விட 50 வயது இளைய பெண்ணை திருமணம் செய்து டிக்டாக் நட்சத்திரமாக உருவெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now