UP Man Forced to Have Sex Change Surgery. (Photo Credit: @CNNnews18 X)

ஜூன் 25, முசாபர்நகர் (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சஞ்சக் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது முஜாஹித். இவருக்கு வயது 20. இவர் ஆரம்பத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக உள்ளூர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இவர்க்கு ஓம் பிரகாஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஓம் பிரகாஷ் அங்கு பொறுப்பாளராக இருந்துள்ளார். பின்னர், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, முஜாஹித், அந்த வேலையை விட்டுவிட்டு, தனது தந்தைக்கு உதவ உள்ளூர் அழகு நிலையத்தில் வேலை செய்யத் தொடங்கினார். இருப்பினும், ஓம் பிரகாஷுடனான நட்பு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், ஒரு நாள், ஓம் பிரகாஷ் முஜாஹித்தின் சில நிர்வாண வீடியோக்களை படம்பிடித்ததாகவும், தனது உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் அவற்றை இணையத்தில் வெளியிடுவதாகவும் முஜாஹி தந்தையைக் கொன்றுவிடுவேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். இதனால் அவர்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ​​​​இதுமட்டுமின்றி ஓம் பிரகாஷ் முஜாஹித்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். ‘Pirates of the Caribbean’ Actor Tamayo Perry Dies: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தில் நடித்த டமாயோ பெர்ரி மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!

இருப்பினும், ஜூன் 3 ஆம் தேதி, விஷயங்கள் உச்சகட்டத்திற்கு சென்றன. ஓம் பிரகாஷ் முஜாஹித்தை அவரது தனது தங்குமிடத்திற்கு அழைத்துள்ளார். அங்கு ஓம் பிரகாஷ், முகாஹித்தின் மொபைல் மற்றும் பிற பொருட்களை எடுத்து விட்டு அவரை மயக்கமடையச் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து, முஜாஹித் எழுந்தவுடன், அவர் பெக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரியில் இருப்பதை உணர்ந்துள்ளார். மேலும் அவருக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. அப்போது தான் அவரது பிறப்புறுப்பு காணாமல் போனதையும் உணர்ந்துள்ளார். ஓம் பிரகாஷ் முஜாஹித்துக்கு பிறப்புறுப்பு நீக்கும் அறுவை சிகிக்சை செய்து, அவரை பெண்ணாக்கி திருமணம் செய்ய நினைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முஜாஹித் கூறியதாவது, "எனக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது புரியவில்லை. என்னிடம் மொபைல் போன் கூட இல்லை, சில மருத்துவமனை ஊழியர்களின் தொலைபேசியை வாங்கி, எனது பெற்றோரை அழைத்து உடனடியாக மருத்துவமனைக்கு வரச் சொன்னேன். எனக்கு நீதி வேண்டும். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எனக்கு உதவுவார் என்றும், தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வார் என்றும் நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து முஜாஹித்தின் தந்தை அளித்த புகாரின் பேரில், முசாபர்நகர் காவல் துறையினர் மன்சூர்பூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்து ஓம் பிரகாஷைக் கைது செய்தனர்.