Girl Died after Taking Abortion Pill: மாதவிடாய் வலியை குறைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட சிறுமி: மூளையில் இரத்தம் உறைந்து பரிதாப பலி.!
16 வயது சிறுமி மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்க, நண்பர்களின் அறிவுரைப்படி கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்ட நிலையில், சிறுமி கடுமையான உடல்நலக்குறைவை சந்தித்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளளது.
டிசம்பர் 20, யோர்க்ஷிரே (World News): இங்கிலாந்தில் உள்ள இலண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், இறுதி ஆண்டு பயின்று வந்த மாணவி லைலா கான் (வயது 16). இவருக்கு கடந்த நவம்பர் 25ம் தேதி மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் கடும் வயிற்று வலி இருந்துள்ளது.
நண்பர்களின் பேச்சைக்கேட்டு விபரீதம்: வலியால் அவதிப்பட்ட சிறுமி, தனது தோழிகளிடம் கூறி இருக்கிறார். அவர்கள் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டால், மாதவிடாய் வலி குறையும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய சிறுமியும் வலி குறைய தினமும் மாத்திரை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிப்பு: இதனால் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 05ம் தேதி சிறுமியின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது. வாந்தி, மயக்கம் என சிறுமி அவதிப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து, சிறுமியை அவரின் தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். Greta Gerwig Noah Baumbach Marriage: 12 ஆண்டுகால காதலரை கரம்பிடிக்கும் பார்பி படத்தின் இயக்குனர்: விரைவில் திருமணம்.!
மோசமான உடல்நிலை: முதலில் வேறு ஏதேனும் பிரச்சனையாக இருக்கலாம் என மருத்துவர்கள் உடலநலக்குறைவை சரி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், உடல்நலனில் சிறிது முன்னேற்றம் போல தெரிந்தாலும், பின்னாளில் அவை கடுமையாகியுள்ளது. இறுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார்.
மூளையில் உறைந்துபோன இரத்தம்: இதன்பின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு முழு உடல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, சிறுமியின் மூளையில் இரத்தம் கட்டியாகி இருந்தது தெரியவந்தது. அது சம்பந்தமான சிகிச்சையின்போதே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், சிறுமி மாதவிடாய் வலியை குறைக்க கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் நடந்த விபரீதம் தெரியவந்துள்ளது.
அலட்சியம் வேண்டாம்: காய்ச்சல் ஏற்படாமல் அதற்கான மாத்திரை சாப்பிட்டாலே உயிர் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பது உலகறிந்த விஷயம். மாத்திரைகளின் விபரீதம் குறித்து நன்கு பயிற்றுவிக்கப்படும் மேலை நாடுகளிலேயே, பெண் அலட்சியமாக தோழிகள் சொல்பேச்சு கேட்டு பலியான சோகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.