ஜூலை 09, கலிபோர்னியா (World News): தொழில்நுட்ப உலகில் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள் நிறுவனம். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (COO) இருந்த ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில் அதன் நிர்வாகக் குழுவில் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவராக இருந்தவரும், மேலும் 30 ஆண்டுகால ஆப்பிள் நிறுவனத்தில் அனுபவமுள்ள சபிஹ் கான் புதிய தலைமை இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த மாத இறுதியில் அதிகாரபூர்வமாக பதவியேற்கவுள்ளார். சபிஹ் கான் (Sabih Khan) இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இந்திய குடும்பத்துக்கு சோகம்.. உடல்கருகி பறிபோன 4 உயிர்கள்.!
யார் இந்த சபிஹ் கான்?
- இவர், 1966ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் பிறந்தார். தனது 10 வயதில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு, அவர் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் இயந்திர பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், அவர் ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
- 1995ஆம் ஆண்டு, அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். 30 ஆண்டுகாலம் பணியாற்றி, ஆப்பிள் நிறுவனத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
- 2019ஆம் ஆண்டில், அவர் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவரானார். திட்டமிடல், கொள்முதல், உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் தயாரிப்பு நிறைவேற்ற செயல்பாடுகளை நிர்வகிப்பதோடு மட்டுமல்லாமல், தயாரிப்பு தரத்திற்கும் அவர் சிறந்து பங்காற்றினார்.
- முன்னதாக, ஆப்பிளின் கார்பன் தடத்தை 60 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்ததற்காக குக் அவரை பாராட்டினார். தற்போது, 59 வயதான அவர் ஆப்பிளின் உற்பத்தியை மேம்படுத்தவும் அமெரிக்காவில் அதை விரிவுபடுத்தவும் புதிய தொழில்நுட்பங்களையும் அதிநவீன முறைகளையும் அறிமுகப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.