Innocent Jailed 48 Years: 48 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்ததும் நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நபர்: வாழ்க்கையை இழந்த நபரின் வேதனை.!

சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட நபர், 71 வயதில் 48 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பின்னர் நிரபராதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Prison Arrest File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, ஒக்லஹாமா (World News): அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா மாகாணத்தை சார்ந்தவர் கிலின் சிம்மன்ஸ் (வயது 71). இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு மதுபான கடையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 30 வயதுடைய நபரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்பாவிக்கு கிடைத்த நீதி: கடந்த 48 ஆண்டுகள் ஒரு மாதம் 18 நாள் சிறைவாசத்தை கழித்த இவர், கடந்த ஜூலை மாதம் சிறு தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின் நடைபெற்ற மேல்முறையீடு மற்றும் விசாரணையை தொடர்ந்து அவர் நிரபராதி என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. Global Warming by Breathing: உலக வெப்பமயமாதலுக்கு உந்துகோலாக அமைக்கும் மனிதர்களின் சுவாசம்?; ஆய்வில் அதிச்சித்தரும் முடிவுகள்..! 

48 ஆண்டுகள் கடுங்காவல் சிறை வாழ்க்கை: இதனால் அவரது 48 ஆண்டு கால வாழ்க்கையானது சிறையிலேயே முடிந்தது தெரியவந்துள்ளது. தற்போது 71 வயதில் அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். இவருடன் அவரது நண்பர் ராபர்ட் என்பவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சம்பவத்தின் போது நிகழ்விடத்திலும், அந்த மாகாணத்திலும் இல்லை.

நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு: அன்றைய சூழ்நிலை மற்றும் சாட்சியங்கள் இவர்கள் இருவரையும் சிறையில் தள்ளி இருக்கிறது. இந்நிலையில், தற்போது கடந்த ஜூலை சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள், தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஆதாரங்களை திரட்டி சமர்ப்பித்ததின் பேரில், இவர்கள் நிரபராதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிம்மன்சுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.