டிசம்பர் 21, இலண்டன் (London): உலகளவில் பருவநிலை மாற்றம் என்பது, எதிர்காலங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யவும், கார்பன்-டை-ஆக்சைடு உட்பட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கரியமில மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்கவும் உலகளாவிய நாடுகள் ஒன்று திரண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆய்வில் அதிர்ச்சி தகவல்: இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், மனிதர்கள் சுவாசிக்கும் போது, சுவாசத்திற்கு சுவாசம் வழியாக வெளியேறும் மீத்தேன் (CH4) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) போன்றவை புவி வெப்பமடைதலுக்கு (Global Warming) வலுசேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் (Green House Gases) மனித சுவாசத்தில் இருந்து வெளிப்படுவதால், பிற்காலத்தில் இது மிகப்பெரிய பிரச்சனையாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. Amul Cheese Advertisment: அமுல் பெயரில் சீஸ் விற்பனை அறிமுகம்?.. வைரலாகும் விளம்பரத்திற்கு மறுப்பு தெரிவித்த அமுல் நிறுவனம்.!
சுவாச காற்றில் கரியமில வாயு: இங்கிலாந்தில் 200 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், 31 நபர்களின் சுவாசத்திலிருந்து வெளியேறும் காற்றில் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை இருந்துள்ளது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சைவ உணவு, அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என இரண்டு வகையாக பிரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் ஒரே மாதிரியான முடிவுகள் பெறப்பட்டு, அவர்களின் சுவாசத்தில் மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியாகி இருக்கின்றன.
தொழிற்சாலை வாயு வெளியேற்றத்தை விட மிகமிகக்குறைவு: தற்போது கண்டறியப்பட்ட ஆய்வுகளின்படி, மனிதர்கள் வெளியிடும் மீத்தேன் போன்ற வாயுக்கள், ஒட்டுமொத்த இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களின் கணக்கீட்டின்படி 0.1% ஆகும். ஆய்வில் கலந்துகொண்டவர்கள் மாதிரிகளை சேகரித்தபோது, ஒவ்வொருவரும் தங்களின் சுவாசத்திற்கு பின்னர் நைட்ரஸ் ஆக்ஸைடை வெளியிட்டு இருக்கின்றனர்.
கால்நடைகளும் வெளியிடுகின்றன: 31% நபர்கள் மீத்தேன் வாயுவை வெளியிட்டு இருக்கின்றனர். கால்நடைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, ஒட்டுமொத்த இங்கிலாந்தில் உயிரினங்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயுக்களின் அளவு 1% ஆகும்.