America Flood (Photo Credit : @i X)

ஜூலை 05, டெக்சாஸ் (World News Tamil): அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், கெர் கவுண்டி பகுதியில் தனியார் சார்பில் சுமார் 750 குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்கள் தங்க தற்காலிக டென்ட் கேம்ப்களும் அமைக்கப்பட்டு இருந்தன. அப்போது, திடீரென காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கேம்பில் இருந்த மாணவ-மாணவிகள் பதறிப்போயினர். இவர்களில் வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்த 20 குழந்தைகள் அடித்து செல்லப்பட்டனர்.

13 குழந்தைகள் பலி:

20 பேரில் இதுவரை 13 குழந்தைகளின் உடலை மீட்புப்படை அதிகாரிகள் சடலமாக மீட்டுள்ளனர். எஞ்சியோரின் உடலை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோடைகால விடுமுறையை முன்னிட்டு சம்மர் கேம்ப் (Summer Camp) ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த சோகம் நடந்துள்ளது. 14 ஹெலிகாப்டர்கள், 12 டிரோன்கள், 500 பணியாளர்கள் கொண்டு குழந்தைகளின் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. வெள்ளம் வருவதாக தகவல் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் குழந்தைகள் தங்கியிருந்த இடத்தினை வெள்ளம் சூழ்ந்துபோனது.

வெள்ளத்தில் சிக்கி 20 குழந்தைகள் மாயம்:

மீட்புப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள்: