
மே 11, கலிபோர்னியா (World News): அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாணத்தில் ஓசோன் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று மதியம் 2 மணியளவில் ஒரு நபர் தனது வளர்ப்பு நாயை நடைப்பயிற்சி செய்ய அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கடல் அலையில் நாய் சிக்கியதை தொடர்ந்து, அவர் அதனை காப்பாற்ற கடலுக்குள் குதித்ததாக தெரிய வருகிறது.
கடல் அலையில் சிக்கிய நாய் :
இதனைத் தொடர்ந்து கடல் அலை அவரை இழுத்துச் செல்லவே, தகவலறிந்து விரைந்த மீட்புகுழுவினர் கடலில் மூழ்கிய நபரை மயங்கிய நிலையில் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்த நிலையில், கடல் அலையில் சிக்கிய வளர்ப்பு நாய் காயங்களுடன் தப்பியது. Donald Trump: தாக்குதலை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!
காப்பாற்ற சென்றவர் மரணம் :
உயிரிழந்த நபரின் பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் தெரியாத காரணத்தினால் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வளர்ப்பு நாய் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.