IPL Auction 2025 Live

World Oldest Dog Died: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்ற, உலகிலேயே மிகவும் வயதான நாய் மரணம்..!

கின்னஸ் சாதனைக்கு சொந்தமான நாய் ஒன்று, தனது வாழ்நாட்களை நிவர்த்தி செய்து இயற்கை எய்தியது.

Dog Bobi (Photo Credit: X)

அக்டோபர் 24, போர்ச்சுகல் (World News): வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு 15 வயது முதல் 16 வயது மட்டுமே அதன் ஆயுட்காலமாக இருக்கிறது.

இந்த நாய்கள் ஒரு நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் முதல் 14 மணி நேரம் வரை உறங்க கூடியவை. குறைந்தபட்சமாக 15 சென்டிமீட்டர் உயரம் முதல் அதிகபட்சமாக 110 சென்டிமீட்டர் உயரம் வரை அதன் வகைக்கு ஏற்ப வளரும் தன்மை கொண்டவை. Mammootty Next Movie Update: மூன்றாவது முறையாக ஒரே இயக்குனருடன் கைகோர்த்த மம்முட்டி; டர்போ படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.! 

ஆனால் உங்களுக்கு 31 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நாய் குறித்து தெரியுமா?. போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த பாபி என்ற நாய் உலகிலேயே மிகவும் வயதான நாய் என்ற கின்னஸ் உலக சாதனையை பெற்ற நாயாகும்.

இந்த நாய் 31 ஆண்டுகள் 165 நாட்கள் வாழ்ந்த நிலையில், தற்போது அதன் ஆயுட்காலம் நிறைவு பெற்று இயற்கை எய்தியுள்ளது. இது நாயின் பராமரிப்பாளருக்கு பெருத்த சோகத்தை வழங்கியுள்ளது.

நாம் அன்போடு கூப்பிட்டாலும், கூச்சலுடன் கண்டடித்தாலும் நம்மை வாலாட்டி, அன்பை முத்தமாக பொலிந்து பசப்பிணைப்பை உறுதிப்படுத்தும் நாய்கள் நமது குடும்ப உறுப்பினராக பலருக்கும் இருக்கிறது.