Rolls Royce Arcadia Droptail: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய சொகுசு கார்.. ஆர்கேடியா டிராப்டெயில் வெளியீடு..!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், ஆர்கேடியா டிராப்டெயில் என்ற சொகுசு கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது.

Rolls Royce Arcadia Droptai (Photo Credit: @kotecinho X)

மார்ச் 04, புதுடெல்லி (New Delhi): ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனம், ஆர்கேடியா டிராப்டெயில் (Arcadia DropTail) என்ற ரோட்ஸ்டர் (Roadster) வகை சொகுசு கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை சுமார் 209 கோடி ரூபாய் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த காரை சிங்கப்பூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாகவே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

சிறப்பம்சங்கள்: இந்த காரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளை நிறத்தைக் கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் அலங்கரித்து இருக்கின்றது. இந்த நிறம் அலுமினியம் மற்றும் கண்ணாடி துகள்களின் கலவையால் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த காரின் உட்பக்கம் மரத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக சாண்டாஸ் ஸ்ட்ரைட் கிரைன் ரோஸ்வுட் (Santos Straight Grain RoseWood) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. Acid Attack On 3 College Girls: தேர்வு எழுத சென்ற பெண்களுக்கு நடந்த விபரீதம்.. 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு..!

இதனை தயார் செய்ய மட்டுமே சுமார் 8000 மணி நேரங்கள் எடுத்துக் கொண்டதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து இருக்கின்றது. இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 6.75 லிட்டர் வி12 மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 601 எச்பி மற்றும் 841 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.



தொடர்புடைய செய்திகள்

Rolls Royce Arcadia Droptail: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய சொகுசு கார்.. ஆர்கேடியா டிராப்டெயில் வெளியீடு..!

Rolls Royce Layoff: 2,500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.! அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

MSD Vintage Rolls Royals: பழமை வாய்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை கெத்தாக ஓட்டும் தல தோனி; ராஞ்சி சாலையில் அசத்தல்.!

EICMA 2024: உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி இஐசிஎம்ஏ 2024.. தெறிக்கவிட்ட ராயல் என்பீல்டு..!

Pay as You Drive: கார்களுக்கான இந்த பாலிசியைப் பற்றி தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!

Electric Bus Order: சென்னை எம்டிசியிடமிருந்து 500 எலக்ட்ரிக் பேருந்து ஆர்டர்கள்.. தட்டி தூக்கிய அசோக் லேலண்ட் நிறுவனம்.!

Vehicle Insurance: உங்க வாகனத்தோட காப்பீட்டுத் திட்டம் நிலைமை என்ன தெரியுமா.? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!