LIC Movie Update: விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் எல்ஐசி திரைப்படம்: பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடக்கம்.. விபரம் இதோ.!
அதனைத்தொடர்ந்து, தற்போது நடிகராக விக்னேஷ் சிவனின் படத்தில் மீண்டும் களமிறங்குகிறார்.
டிசம்பர் 15, சென்னை (Chennai): கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இப்படம் தமிழக மக்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்றது. அதனைத்தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி உத்தமனாக நடித்த பிரதீபுக்கும் செல்வாக்கு அதிகரித்தது.
2 சைமா விருதுகள்: லவ்டுடே (Love Today) திரைப்படம் இளம் தலைமுறையிடையே பெருவாரியான வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் அதிகளவில் கவனிக்கப்ட்டர். மேற்கூறிய இரண்டு படமும் சைமா விருதுகளை பிரதீபுக்கு நடிகர் மற்றும் இயக்குனர் பிரிவில் பெற்றுத்தந்தது. MP Suspended: மக்களவையில் அமளி... மக்களவையில் இருந்து 15 எம்.பி.க்கள் இடைநீக்கம்..!
விக்னேஷ் சிவன் இயக்கம்: இந்நிலையில், பிரதீப் தற்போது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Love Insurance Corporation LIC) என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். முன்னதாக விக்னேஷ் சிவன் அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னாளில் அது கைவிட்டுப்போனது.
எல்ஐசி படக்குழு: தற்போது பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிரூத் இசையமைக்கிறார். ரூபாய் 60 கோடி பட்ஜெட்டில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studios) சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்து வழங்குகிறார். பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி செட்டி, எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு உட்பட பலரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். Imran Khan Arrested: அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கு… இம்ரான்கான் கைது..!
பூஜை நிறைவு, படப்பிடிப்பு தொடக்கம்: படத்தின் பூஜை நேற்று முடிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. 2024க்குள் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் சிவன் - அனிரூத் கூட்டணி: இயக்குனர் விக்னேஷ் சிவன் - இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரர் ஆகியோர் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தனர். தற்போது மீண்டும் அவர்கள் இணைந்து இருக்கின்றனர்.