![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Imran-Khan-380x214.jpg)
டிசம்பர் 14, பாகிஸ்தான் (Pakistan ): பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆன இம்ரான் கான் பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர். இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், முறைகேடாக விற்பனை செய்து சொத்து சேர்த்தார். இதன் காரணமாக இவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். MP Suspended: மக்களவையில் அமளி... மக்களவையில் இருந்து 15 எம்.பி.க்கள் இடைநீக்கம்..!
அதனைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து, விடுதலை செய்தது. இந்நிலையில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதற்காக இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷா மக்மூத் குரேசி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். ஆனால் இருவரும் நீதிமன்றத்தில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.