டிசம்பர் 14, டெல்லி (Delhi): இந்திய பாராளுமன்றத்தில் (Parliament) மக்களவையில் நேற்று அலுவல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென இரண்டு பேர் கூச்சலிட்டுக் கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தனர். அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் அத்துமீறிய அந்த இருவரையும் சில உறுப்பினர்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதே நேரம் நாடாளுமன்ற வாசலில் இருபெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவையில் அமளி: மேலும் நேற்று மக்களவையில் உள்ளே நுழைந்தவர்களுக்கு பாஸ் கொடுத்தது பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா ஆவார். அதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் கூடியதும், மக்களவையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஜக எம்பி பாஸ் வழங்கியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். Mohammed Shami opens up: கடுப்பான முகமது ஷமி... நடந்தது என்ன?..!
15 எம்பிக்கள் இடைநீக்கம்: இதனைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட, 14 மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன், எஸ்.ஆர். பார்த்திபன், ஜோதிமணி, ஹைபி ஈடன், டீன் குரியாகோஷ், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் மற்றும் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி உறுப்பினர் என 15 எம்பிக்கள் இடைநீக்கம் (MP Suspended) செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.