Emmy Awards 2024: எம்மி விருதுகள் 2024... விருது வாங்கியவர்கள் யார்? முழு பட்டியல் இதோ..!
எம்மி விருதுகள் 2024 வென்றவர்களின் முழுமையான பட்டியலைப் பார்ப்போம்.
ஜனவரி 16, லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles): 75வது பிரைம் டைம் எம்மி விருதுகளானது (Emmy Awards) இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. மேலும் விருது வழங்கும் விழா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள பீகாக் தியேட்டரில் இருந்து ஒளிபரப்பப்பட்டது.
விருது வாங்கியவர்கள்: இதில் தி பியர் (The Bear) சீரிஸ் டீம் பல விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. அதன்படி, அதில் நடித்த, நகைச்சுவையில் முன்னணி நடிகர் ஜெர்மி ஆலன் ஒயிட், துணை நடிகர் எபோன் மாஸ், துணை நடிகை அயோ அடேபிரி, சிறந்த எழுத்து கிறிஸ்டோபர் ஸ்டோர், சிறந்த நகைச்சுவைத் தொடர் போன்ற விருதுகளை பெற்றனர். Krishna Janmabhoomi-Shahi Idgah Case: கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா வழக்கு... உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை..!
மேலும் பீஃப் (Beef) தொடர், சிறந்த குறுந்தொடர் விருதை பெற்றது. அதில் நடித்த ஸ்டீவன் யூன் முன்னணி நடிகர் மற்றும் எல்லி வோங், லிமிடெட் தொடர் முன்னணி நடிகை விருதை பெற்றார். நகைச்சுவைத் தொடரில் முன்னணி நடிகை விருதை அபோட் எலிமெண்டரி தொடரில் நடித்த குயின்டா புருன்சன் பெற்றார்.
துணை நடிகர், நாடகம் விருதை சக்செஷன் (Succession) தொடரில் நடித்த மாத்யூ மக்ஃபேடியன் பெற்றார். நாடகத்தில் துணை நடிகை விருதை தி ஒயிட் லோட்டஸ் (The White Lotus) தொடரில் நடித்த ஜெனிபர் கூலிட்ஜ் பெற்றார். துணை குறுந்தொடர் நடிகர் விருதை பிளாக் பேர்ட் தொடரில் நடித்த பால் வால்டர் ஹவுசர், துணை குறுந்தொடர் நடிகை விருதை, டாஹ்மர் மற்றும் மான்ஸ்டர் தொடரில் நடித்த நீசி நாஷ், பேட்ஸ் பெற்றனர். Car Collision: இரண்டு கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி., 4 பேர் காயம்.! நள்ளிரவில் நடந்த சோகம்.!
சக்செஷன் தொடரின் மூலம் நாடகத் தொடரில் சிறந்த முன்னணி நடிகை சாரா ஸ்னூக் மற்றும் நாடகத் தொடரில் சிறந்த நடிகர் கீரன் கல்கின், விருதுகளைப் பெற்றனர். சிறந்த ஆவணப்படம் மற்றும் புனைகதை அல்லாத தொடர் விருதை 1619 திட்டம் ஹுலு பெற்றது.