ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடம் தான் மதுரா. இது உத்திரப்பிரதேசத்தில் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள பழமையான கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலின் ஒரு பகுதி 1669-70-ல், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது. பிறகு அந்த பாதி நிலத்தில் அவுரங்கசீப், ஷாயி இத்கா மசூதியை கட்டியுள்ளார். பின்னர் சுதந்திரத்திற்கு பின் அந்த நிலத்தை மீட்க இந்துக்கள், முஸ்லிம்களுடன் ஒரு உடன்பாடு செய்தனர். அதன்படி, மசூதியை ஒட்டியபடி புதிதாக கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலை கட்டியுள்ளனர். Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு ஆரம்பம்... சீறி பாயும் காளைகள்... அடக்கும் வீரர்கள்..!
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: இருப்பினும், அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட மசூதி இடிக்கப்பட்டு அந்த நிலத்தை மீட்க வேண்டும் (Krishna Janmabhoomi-Shahi Idgah) என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அயோத்தி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பின் பின், இந்த கோரிக்கைகள் மீண்டும் எழுந்தது. இதற்கிடையில், வாரணாசியின் கியான்வாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கள ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு கமிஷனை நியமிக்க வேண்டும் என்று மனு எழுந்தது. இதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் (Allahabad High Court)கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியது.
உச்சநீதிமன்றம் தடை: இந்த தீர்ப்பை எதிர்த்து இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி தகராறு தொடர்பாக மசூதியை ஆய்வு செய்ய கமிஷனரை நியமித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் (Supreme Court of India) தடை விதித்துள்ளது.