Student Gets 212 Out Of 200 Marks: 200 க்கு 211 மதிப்பெண் பெற்ற மாணவி; ஆச்சரியத்தில் பூரித்துப்போன பெற்றோர்..!
பிரைமரி பள்ளியில் படித்து வரும் மாணவியின் ரேங்க் கார்ட் தகவலின்படி, அதிகபட்சமான 200 மதிப்பெண்ணுக்கு மாணவி 211 மதிப்பெண் எடுத்ததாக ஆசிரியர் எழுதிக்கொடுத்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
மே 06, அகமதாபாத் (Gujarat News): மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளில் படித்து வரும் மாணவ - மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவ - மாணவியர்களுக்கு இன்று (06 மே 2024) தேர்வு முடிவுகள் காலை 09:30 மணியளவில் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து, மதியம் 11:00 மணியளவில் ஐசிஎஸ்சிஇ தேர்வு முடிவுகள் வெளியாகின. Team India Jersey for ICC T20 World Cup 2024 Released: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. கெட்டப்பை மாற்றிய இந்தியா.. இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்..!
தொடக்கப்பள்ளியில் போன்று வரும் மாணவி: இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பயின்று வரும் 4ம் வகுப்பு மாணவருக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவரின் தேர்வு மதிப்பெண் அட்டை கொடுக்கப்பட்ட நிலையில் பெற்றோருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அதாவது, குஜராத் மாநிலத்தில் உள்ள தாஹாத் மாவட்டம், கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபென். 14-year-old Girl Kills Brother In Chhattisgarh: "இனி போன் யூஸ் பண்ணாத.." என்ற அண்ணன்.. கடுப்பில் கோடரியால் வெட்டி கொன்ற தங்கை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!
அதிகபட்ச மதிப்பெண்ணை விட கூடுதல் மதிப்பெண் பெற்றதாக அறிவிப்பு: இவர் எழுதிய தேர்வுகளில் குஜராத்தி மற்றும் கணித பாடங்களின் முறையே தேர்வு மதிப்பெண் அதிகபட்சமான 200 க்கு 211 மற்றும் 212 பெற்றதாக பதிவு செய்யப்பட்டு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஆச்சரியத்துடன் பெற்றுக்கொண்ட மாணவி, தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் காண்பித்தபோது அவர்கள் அதிர்ந்துபோயினர். பின் இதுகுறித்த புகைப்படத்தை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். World First 6G: 6 ஜி 100 ஜிபிபிஎஸ் நெட்ஒர்க்கை செயல்படுத்தும் 6ஜி சாதனம்; மாஸ் காட்டிய ஜப்பான்.! விபரம் உள்ளே.!
துறை ரீதியான விசாரணை & திருத்தப்பட்ட அட்டை வழங்கல்: இதனால் அப்பதிவுகள் வைரலாகிய நிலையில், தேர்வு மதிப்பெண் குறித்த விபரம் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனையடுத்து, உடனடியாக மதிப்பெண் அட்டையை (Rank Card) மறுத்திருத்தம் செய்து அதிகாரிகள் வழங்கினர். மேலும், தவறு தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. திருத்தப்பட்ட முடிவுகளின்படி மாணவி குஜாத்தி பாடத்தில் 191 மதிப்பெண்ணும், கணிதத்தில் 190 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.