Team India jersey (Photo Credit: Instagram)

மே 06, புது டெல்லி (Sports News): டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (ICC Men's T20 World Cup 2024) வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுபவர். இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி: தொடர்ந்து கடந்த வாரம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரிசர்வ்ஸ் பிளேயர் ஆக ஷுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதே நேரம் தமிழக வீரர்கள் நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 14-year-old Girl Kills Brother In Chhattisgarh: "இனி போன் யூஸ் பண்ணாத.." என்ற அண்ணன்.. கடுப்பில் கோடரியால் வெட்டி கொன்ற தங்கை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

இந்திய அணியின் ஜெர்சி: இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஜெர்சியின் டிசைன் குறித்துப் பார்த்தால், வழக்கமான நீல நிற உடையின் தோள்பட்டையில் காவி நிறம் உள்ளது. மேலும் இந்தியாவின் மூவர்ணக் கொடியின் கோடுகளை சட்டையின் காலரில் வைத்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by adidas India (@adidasindia)

இந்திய அணியின் ஜெர்சி: