IPL Auction 2025 Live

Karnataka Shocker: தொழில் நஷ்டத்தை மந்திரத்தில் சரி செய்வதாக மாபிங் செய்து மிரட்டல்; மரக்கடை உரிமையாளர் தற்கொலை விவகாரத்தில் இளைஞர் கைது.!

இறை நம்பிக்கை என்பது மனிதர்களை நல்வழிப்படுத்தவே தவிர, கோடிகளை குவிப்பதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Accuse Vishnu | Death Body File Pic (Photo Credit: @veeyeskay X / Pixabay)

மார்ச் 23, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 22). இவர் ராஜாஜி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். இவர் தன்னை முகநூலில் (Facebook Friends) மாந்திரீகவாதி என அறிமுகம் செய்து, உறவுகளில் ஏற்படும் விரிசல் மற்றும் தொழில் ஏற்படும் நஷ்டம் ஆகியவற்றை சரி செய்ய முடியும் என கூறி இருக்கிறார். இவரின் பின்தொடர்பாளர்கள் பலரும் அவர் கூறியதை கேட்டு செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

முகநூல் பழக்கம்: அங்குள்ள ராமநகரா மாவட்டம், கனகபுரா, சந்த்ரபுரா கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25). இவர் மரக்கடை உரிமையாளர் ஆவார்கள். கடந்த சில மாதங்களாகவே இவரின் தொழில் தொடர் சரிவை சந்தித்து இருக்கிறது. இதனால் முத்துராஜ், தனது முகநூல் பழக்கத்தில் நண்பராக அறிமுகமான விஷ்ணுவின் உதவியை நாடி இருக்கிறார். முத்துராஜிடம் விபரத்தை கேட்டறிந்த விஷ்ணு, தான் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் என கூறியுள்ளார். Moscow ISIS Militants Attack: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலில் 60 பேர் துள்ளத்துடிக்க பலி., ரஷ்ய அரசு, மக்களுடன் துணைநிற்போம் - நரேந்திர மோடி.! 

குடும்பத்தில் குழப்பம் உண்டாக்க முயற்சி: சம்பவத்தன்று விஷ்ணு முத்துராஜின் குடும்பத்தினர் இருக்கும் புகைப்படத்தை பெற்று பூஜைகள் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்காக குடும்பத்தினரின் புகைப்படமும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதனை மாபிங் செய்த விஷ்ணு முத்துராஜ் மற்றும் அவரது மாமியார் இடையே கலகத்தை உண்டாக்கிவிடுவேன் என ஆதாயம் அடைய நினைத்திருக்கிறார். அதற்கான மிரட்டலுடன் விஷ்ணு முத்துராஜை அணுகி இருக்கிறார்.

ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார்: இதனால் மனமுடைந்துபோன முத்துராஜ், கனகபுராவில் உள்ள அர்காவதி ஆறில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கடந்த மார்ச் 10ம் தேதி நடைபெற்று இருக்கிறது. முத்துராஜின் தற்கொலை சம்பவம் அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், தொழில் விஷயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. காவல்துறையினரால் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. CSK Vs RCB Highlights: பெங்களூர் அணியை கதறவிட்ட சென்னை சிங்கங்கள்: முதல் போட்டியில் கர்ஜனை வெற்றி..! 

தொடர் விசாரணை: இந்நிலையில், அவரின் தற்கொலை விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக, மாந்த்ரீகவாதி என மாற்றிய விஷ்ணுவின் அதிர்ச்சி செயல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நேற்று விஷ்ணு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் தற்போது வரை 60 க்கும் மேற்பட்ட மக்கள் ஏமார்ந்து இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விஷ்ணுவிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.