Vladimir Putin | Narendra Modi (Photo Credit: ANI X Wikipedia Commons)

மார்ச் 23, மாஸ்கோ (World News): ரஷிய தலைநகர் மாஸ்கோ (Moscow Terror Attack), க்ரோகஸ் சிட்டி மாலில் நேற்று இசைக்கச்சேரி உட்பட பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருந்தது. அச்சமயம் சற்றும் எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் அரங்கத்தில் திரண்டிருந்த மக்களில் 60 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 145 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிசூடு நடத்திய விசயத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று இருப்பதால், அங்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை தெரிவித்த அமெரிக்கா: சமீபத்தில் ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து, 2030 வரையில் மீண்டும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் அதிபராக தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவரின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்குள், ரஷியாவின் தலைநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். ஈராக், ஆப்பிரிக்கா, சிரியா ஆகிய நாடுகளை மையமாக கொண்டு செயல்படும் ஐஎஸ் பயங்கரவாதிகள், சமீபகாலமாகவே ரஷியாவில் தாக்குதல் நடத்தும் முனைப்புடன் இருந்து வந்துள்ளனர். நேற்று நடைபெற்ற தாக்குதல் குறித்து கடந்த மாதம் அமெரிக்காவின் உளவுத்துறை, ரஷியாவுக்கு முன்னெச்சரிக்கையும் தெரிவித்துள்ளது. CSK Vs RCB Highlights: பெங்களூர் அணியை கதறவிட்ட சென்னை சிங்கங்கள்: முதல் போட்டியில் கர்ஜனை வெற்றி..! 

Moscow Terror Attack (Photo Credit: @ANI X))

2014க்கு பின் அதிர்ச்சி சம்பவம்: இதன்பின், ரஷியாவில் உள்ள பல மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 07ம் தேதி அங்குள்ள காகாவஸ் மாகாணத்தில் ரஷிய அதிரடிப்படையினர் - ஐஎஸ் பயங்கரவாதிகள் இடையே நடந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியாவின் வரலாற்றில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் என்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்து இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு எகிப்தில் இருந்து ரஷியா வந்த பயணிகள் விமானம் ஐஎஸ் குழுவினரால் தாக்கப்பட்டு 224 பேர் கொல்லப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்திற்கு பின் மாஸ்கோவில் நேரடி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.

பிரதமர் மோடி இரங்கல் & கண்டனம்: இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், "மாஸ்கோவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் எங்களின் எண்ணம் மற்றும் பிரார்த்தனை இருக்கிறது. இத்துயரமான நேரத்தில் ரஷிய அரசு மற்றும் மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கும்" என கூறியுள்ளார்.

நேரடி களக்காட்சிகள்: