CSK Vs RCB IPL 2024 | MS Dhoni & Virat Kohli (Photo Credit: CricCrazyJohns)

மார்ச் 23, சென்னை (Sports News): 17 ஆவது ஐபிஎல் சீசன் தொடர் நேற்று (IPL 2024) சென்னையில் கோலாகலமாக கொண்டாட்டத்துடன் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூர் அணியும் (CSK Vs RCB) களம் கண்டன. அணியை புதிய இரண்டு கேப்டன்கள் ருத்ராஜ் கெய்க்வாட், பாப் டு பிளசிஸ் ஆகியோர் தலைமையேற்று வழிநடத்தினர். ஐபிஎல் தொடரின் இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் சார்பில் ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி (Virat Kohli), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கர்ண் சர்மா, அல்சாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ் வீரர்களும், சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே வீரர்களும் களமிறங்கி இருந்தனர்.

MS Dhoni (Photo Credit: @TheDhoniEra X)

கொண்டாட்டத்துடன் தொடங்கிய முதல் ஆட்டம்: ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி, கண்கவர் நிகழ்ச்சிகள் என மாலை 6 மணிக்கு மேல் கொண்டாட்டத்துடன் தொடங்கிய முதல் ஆட்டம், நேற்று இரவு எட்டு மணிக்கு அணியினரை களமிறங்க வைத்தது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி தொடக்கத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது‌. முதலில் பெங்களூர் அணி நிதானமாக விளையாடி பின் மளமளவென ரன்களை உயர்த்தியது. ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்கள் முடிவுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி நோக்கி 173 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் விராட் கோலி 21 பந்துகளில் 20 ரன்னும், டூப்ளசிஸ் 23 பந்துகளில் 35 ரன்னும், அனுஜராத் 28 பந்துகளில் 45 ரன்னும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.

Virat Kohli (Photo Credit: @CricCrazyJohns X)

மாஸ் காண்பித்த சென்னை: அதனைத் தொடர்ந்து, மறுமுனையில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின் அதிரடியாக அடித்து அடி அசத்தலாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். சென்னை அமைப்பின் சார்பில் விளையாடியவர்களில் ருத்ராஜ் 15 பந்துகளில் 15 ரன்னும், ரவிச்சந்திரா 15 பந்துகளில் 37 ரன்னும், சிவம் 28 பந்துகளில் 34 ரன்னும் எடுத்திருந்தனர். ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. 8 பந்துகளும் எஞ்சி இருந்தன. இதன் வாயிலாக ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்று இரண்டு ஆட்டங்கள்: எப்படியாவது சென்னை மண்ணில் வெற்றி பெற வேண்டும் என பெங்களூரு அணி முனைப்புடன் விளையாடிய போதும், சென்னையை அணியினரின் அதிரடி செயல்பாடுகள் எதிர் அணியினரின் வெற்றியை தவிடுபிடியாக்கியது. ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்ட நாளான இன்று மாலை 03:30 மணியளவில் பஞ்சாப் மற்றும் டெல்லி (Punjab Vs Delhi) அணிகள் மோதிக் கொள்கின்றன. இரவு 07:30 மணிக்கு மேல் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (KKR Vs SRH) ஆகிய அணிகள் மோதிக் கொள்கின்றன. ஜியோ சினிமா செயலியில் (Jio Cinema) போட்டிகளை இலவசமாக நேரலையில் பார்க்கலாம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்போர்ட்ஸ் 18 (Sports 18) தொலைக்காட்சியிலும் நேரலையை காணலாம்.

நேற்றைய போட்டியில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள் வீடியோவாக உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளன..

சென்னை அணியின் மாயாஜாலம்:

தோனியும் - கோலியும்:

தோனி போல மாஸ் காண்பித்த சிவம்: