PM Independence Day speech: சிந்து நந்தி இந்தியர்களுக்கே.. அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சூசக எச்சரிக்கை - பிரதமர் மோடி சூளுரை.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி இந்திய மக்களுக்கு உரை ஆற்றினார்.

PM Modi’s 2025 Independence Day Speech (Phoot Credit : @ANI X)

ஆகஸ்ட் 15, புதுடெல்லி (New Delhi News): 79-வது இந்திய சுதந்திர தினத்தை (79th Independence Day) முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி இந்திய மக்களுக்கு பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் நியூ நார்மல் ஆகும். பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. பயங்கரவாத சக்திகளுக்கு நிதி கொடுத்து வளர்த்துவிட்ட அனைவரையும் இந்தியா மண்ணோடு மண்ணாக்கி இருக்கிறது. நமது ராணுவம் இந்த சிறப்பான பணியை செய்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தை கொண்டு உரிய பதிலடி வழங்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலகளவில் பாராட்டப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முப்படைகளுக்கும் எனது ராயல் சல்யூட். பாகிஸ்தானின் தூக்கத்தை நமது இந்திய ராணுவம் சீர்குலைய வைத்துள்ளது.

இந்திய விவசாயிகளுக்கே சிந்து நதி நீர் :

கடந்த 70 ஆண்டுகளாக பாரத தேசத்தின் விவசாயிகள் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். சிந்து நதிநீரை பயன்படுத்தும் முழு உரிமையும் இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தானில் சென்று நாம் தாக்குதல் நடத்தினாலும், அப்பாவி மக்கள் நம்மால் ஒருபோதும் பாதிக்கப்படவில்லை. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே இந்தியா துல்லிய தாக்குதலை முன்னெடுத்திருந்தது. காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு சென்று இருந்த நபர்களை மதத்தை கேட்டு கொடூரமாக கொலை செய்தனர். குழந்தைகளின் கண் முன்னே தந்தை பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். எதிரிகளின் விவசாய நிலத்துக்கு நமது நீர் கிடைக்க வேண்டாம். இந்திய விவசாயிகளின் நலன் கருதியே சிந்து நதி நீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் காரணமாக இந்திய விவசாயிகள் ஏராளமான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டனர். Happy Independence Day 2025 Wishes Tamil: அகிம்சை, தியாகத்தில் மலர்ந்த இந்திய தேசம்.. நெஞ்சம் நிறைந்த இனிய சுதந்திர தினம் வாழ்த்து..! 

டாலர், பவுண்ட் வணிகத்துக்கு மாற்று இந்தியாவின் ரூபே (Rupay) :

மேட் இன் இந்தியா கொள்கை இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகை செய்துள்ளது. தற்சார்பு என்பதே இந்தியாவின் முழக்கம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டும். இந்தியாவின் தற்சார்பு கொள்கைகளால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்துள்ளது. டாலர், பவுண்ட் போன்றவைகளை சார்ந்திருப்பது தற்சார்பு கிடையாது. பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தும்போது தங்களை எந்த மாதிரியான ஆயுதங்கள் தாக்குகிறது என்பதை கூட எதிரிகளால் கண்டறிய முடியவில்லை. எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா தற்சார்பு என்ற நிலையை விரைவில் அடைய வேண்டும். எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா எப்போதும் இறக்குமதியை சார்ந்து இருக்க கூடாது. செமிகண்டக்டர் துறையில் வரும் ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை அடையும். தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் இந்தியா தற்சார்பு என்ற நிலையை அடைவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.

பிரதமர் மோடி பேச்சு :

விண்வெளித் துறையிலும் இந்தியா முழுமையான தற்சார்பு அடைந்துள்ளது. இந்தியாவுக்கு என விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும். ராணுவத்தில் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை நாம் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்கிற இலக்குடன் செயல்பட வேண்டும். இந்தியாவில் 300 விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன. உர தயாரிப்பு துறையிலும் இந்தியா தற்சார்புக்கு வர வேண்டும். கொரோனா தடுப்பூசியை கண்டறிந்ததன் மூலமாக பல கோடி உலக மக்களை இந்தியா காப்பாற்றி இருந்தது. சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆகிய பின்னரும் நமது விவசாயிகள் உரங்களுக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பது விவசாயத்தில் வளர்ச்சிக்கானது இல்லை. அதிலும் இந்தியா தற்சார்பு என்ற நிலையை விரைவில் அடைய வேண்டும். அதுவே நமது இலக்காக இருக்க வேண்டும். Independence Day Tamil Wishes: இனிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள்.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துச்செய்திகள் இதோ.! 

உலக சந்தையை இந்தியா ஆட்சி செய்திட வேண்டும் :

இந்திய இளைஞர்களின் திறமை மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. மகளிர் சுய உதவி குழு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய இளைஞர்கள் இந்தியாவுக்கான சமூக வலைதளங்களை, சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும். அதனை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டு சமூக ஊடகங்கள் பயன்பாடுகளை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் இந்தியா தற்சார்பு என்ற நிலையை அடைய வேண்டும். விவசாயம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை இந்தியா உலக சந்தையை ஆட்சி செய்திட வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு இந்தியர்கள் முன்னுரிமை கொடுத்தால், நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும். அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி சுற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி :

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement