Aadi Memes: தொடங்கியது ஆடி மாதம்.. சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் கலக்கல் மீம்ஸ்.! கூழ் முதல் குமுறல் வரை..!

இணையத்தில் உலாவும் நகைச்சுவை மீம்ஸ்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.

Aadi Memes (Photo Credit: Facebook)

ஜூலை 17, புதுடெல்லி (New Delhi): தமிழ் மாதங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மாதமாகவும் சிறப்பு வாய்ந்த மாகமாகவும் கருதப்படுவது ஆடி மாதம் தான். ஆடி என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது அம்மன் கோவில் திருவிழாக்களும் தள்ளுபடிகளுமே. அதை விட நம் கலாசாரத்தில் ஆடி மாதம் என்றால் தம்பதிகள் சேரக் கூடாது என பிரித்து வைக்கப்படுவர். ஆடி மாதத்தின் தாக்கம் மீம்ஸ் உலகிலும் குறையவில்லை. ஆடி மீம்ஸ்களை தள்ளுபடிகள் இன்றி இணையத்தில் உலாவ விடுகின்றனர். ஆடி மாத நகைச்சுவையான மீம்ஸ்களை உங்களுக்காக வழங்குகிறோம்.

பிரிக்கும் சொந்தங்கள்:

புதிய தம்பதிகள் ஆடியில் சேரக்கூடாது என்ற ஒரு ஐதீகம் நம்மிடையே நிலவி வருகிறது. அதை தான் இந்த மீம் ‘நான் தான் பிரிச்சேன்’ என ஆடி மாதம் வருவதாக வெளிப்படுத்துகிறது. சொந்தங்கள் என்றால் காதலர்களை பிரிப்பார்கள் என்று பாத்தால் திருமணமானவர்களையும் பிரிக்கிறார்கள். என்ன கொடும சரவணன் இது.

அவன் அவன் வலி அவனுக்கு:

டிஎல், புதிதாக திருமணமானவரிடம், ‘ ஆடி மாசம் ஃப்ரீ-ஆ தான இருப்ப வீக்ண்ட் சர்போர்ட் பன்னு’-னு கேட்டது ஒரு குத்தமா? பொசுக்குனு நொட்டுவாங்கனு பதில் சொல்ற மாதிரி மீம் குபீர்னு சிரிப்பை வர வைக்குது. பாவம் அவருக்கு என்ன ஏக்கமோ தெரியல சார். Bluetooth Speaker Buying Guide: ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்குவது நல்லதா?.. எப்படி அதனை தேர்வு செய்வது?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

நான் ரொம்ப பிஸி:

ஆடியில் அனைவரும் குலதெய்வ கோவில், ஊர் திருவிழாக்கள், தல ஆடி என பல அழைப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதை ஆடி மாதம் பொறந்துட்டாலே கிடாவெட்டுக்கு அங்க வாங்க இங்க வாங்கனு அழைப்ப வந்துட்டே இருக்கே இந்த வாரம் புக் ஆகிருச்சு அடுத்த வாரம் பாக்கலாம் என கவுண்டமனி பாணியின் கூறும் மீம் ஒரு வகையில் உண்மை தான்.

90ஸ் கிட்டோ:

ஆடி மாசத்தில் புது மாப்பிள்ளைகள் மட்டுமில்லை. சில சிங்கிள்ஸ்களும் ஆடி மாதத்தில் வீட்டிக்கு போயிட்டுவானு அனுப்பி வைக்க ஒரு பொண்டாட்டி கூட இல்லனு கதறுகிறார்கள். கவல படதீங்க ப்ரோ அடுத்த ஆடி பார்த்துக் கொள்ளலாம்.

நியாயம் தான் பா:

புது மாப்பிள்ளை குமுறல்களுக்கு கவுண்டர் மீம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. ‘ஒரு மாதம் பிரிச்சு வச்சதுக்கே இப்படி சலிச்சுக்றாங்க. 25 வருஷமா நம்மக்கு ஆடி மாசம் தான்’ என்று சிங்கிள்களின் பதிலாக உள்ளது. பட் உங்க நேர்ம எனக்கு பிடிச்சுருக்கு.

இன்னைக்கு ஒரு புடி:

ஆடியில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கோவிலுக்கு செல்வர். ஆடி மாத கூழுக்கு அவ்வளவு மவுசு. இதை சரியாக வெளிப்படுத்துகிறது இந்த மீம். பொங்கல், சுண்டல், புலியோதரை, கூழ் என அனைத்து வாங்கி வருவது போன்ற மீம் நம்மையே பிரதிபலிக்கிறது.

ஏய் சிந்தாம ஊத்து ணே:

இன்னொரு கூழ் மீம். வெளியில் பீட்சா, பர்கர், சான்வெட்ஜ் மட்டும் தான் என வெளியில் பந்தாவிற்கு கூறுபவர்கள் சீக்ரெட்டாக ஆடி மாச கூழுக்கு வரிசையில் வரிந்து கட்டுக் கொண்டு வாங்கி லன்ஞ்சை முடிப்பதாக இருக்கும் மீம்கள் பல பேச்சுலர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. 20 Years Imprisonment: 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்கள்; 15 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!

ஆடித் தள்ளுபடி:

சாதாரணம் மக்களுக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாதம் இந்த மாதம் பெயரைக் கூறி யாரிடமாவது கேட்டால் போதும். பணக்காரனுக்கு ஆடினா கார் நியாபகம் வரும். நம்மாளுங்களுக்கு தள்ளுபடி தான் நியாபகம் வரும். இப்போ ஆடிக் கார் தான் சொகுசுக் கார் இல்லையாமே.

நம்ம போதும் மா:

பெண்கள் கணவரிடம் ஆடி பொறந்துருச்சு ஆஃபர் போட்டுருக்காங்க சொன்னது எனகு நீ ஆஃபர் உனக்கு நான் ஆஃபர் நமக்கு கடை ஆஃபர்னு நைசா நழுவுற மீம்களும் இணையத்தை சுற்றிக் கொண்டுள்ளது. திரும்புன பக்கம்லா தள்ளுபடினா என்னதான் பன்னுவான் மனுஷன்.

கரெட்டு கிரெட்டு தான்:

ஆடி மாதத்தில் எப்போதும் காவேரியில் தண்ணீர் திறப்பது வழக்கம் ஆனால் ஆடி மாதம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காவேரியில் ஆடி முடிந்ததும் தண்ணீர் வற்றிவிடும் என்பதை இதை விட அழகாக நகைச்சுவையாக அரசியலை பேச முடியாது. மீம் கிரியேட்டர்களுக்கு சற்று நகைச்சுவை உணர்வு அதிகம் தான் போல.