Judgement (Photo Credit: Pixabay).jpg

ஜூலை 16, திண்டிவனம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தென்நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த 7 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் இருவரும் தங்களது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உறவினர்கள் சிலர், சிறுமியை பார்த்துக்கொள்வது போல் அவர்களிடம் அத்துமீறுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். Honor X60i: ஹானர் 'X' சீரிஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! அதன் புகைப்படம் வெளியீடு..!

இவ்வாறு தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களால் (Sexual Abuse) மிகவும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியை இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், உறவினர்கள் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமிகளின் தாய் 2019-ஆம் ஆண்டு பிரம்மதேசம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். இதனிடையே பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

புகாரின் அடிப்படையில், உறவினர்களான தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார், மகேஷ், ரமேஷ், முருகன், அருண், மோகன், துரைராஜ், செல்வம், கமலக்கண்ணன், துரைசாமி, செல்வம், சேகர் ஆகிய 15 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ (Pocso Act) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி வினோதா இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதன்படி, சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த 15 நபர்களுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 32 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.