ஜூலை 16, புதுடெல்லி (New Delhi): ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ளது. வீடு முழுவதும் வைக்கும் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களை காட்டிலும் இந்த வகை ஸ்பீகர்களுக்கு தனி ரசிகர்களே இருந்து வருகின்றன. இந்த ஸ்பீக்கர்களின் விலை அனைவரின் பட்ஜெட்டிற்கு ஏற்ற விதத்தில் இருக்கிறது. ப்ளூட்டூத் ஸ்பீக்கர்களை வாங்கும் போது சில முக்கியமான விஷயங்களைக் கருத்தில் கொண்டு வாங்குவது நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கும்.
ஸ்பீக்கரை தேர்வு செய்யும் முன் எந்த தேவைக்காக பயன்படுத்த வாங்குறீர்கள் என தேர்வு செய்ய வேண்டும். வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கா அல்லது வெளி இட பயன்பாட்டிற்கா என தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஸ்பீக்கர்கள் அனைத்து இடங்களுக்கு ஏற்றதாக இருந்தாலும் தேவையை தெரிந்து வாங்கும் போது பட்ஜெட்குள் நல்ல செயல் திறனுடைய ஸ்பீக்கரைக் கண்டறியலாம். NTK Deputy Secretary Hacked To Death In Madurai: நாம் தமிழர் கட்சி துணை செயலாளர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.. மதுரை பதற்றம்..!
பேட்டரி: ஸ்பீக்கர்கள் அதிக நேரம் செயல்படுமாறு இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் சார்ஜ் இல்லமால் போகும் ஸ்பீக்கர்களைத் தேர்வு செய்ய வேண்டும். சிறிய பேட்டரிகள் விரைவில் சார்ஜ் இல்லாமல் ஆகிவிடும். 500mA to 800mA உடைய பேட்டரிகள் பொதுவாக 3 முதல் 5 மணி நேரம் வரை நீட்டிக்கும் திறன் உடையவை. ஸ்பீக்கரைப் பயன்படுத்தும் நேரத்தை பொருத்து பேட்டரியைத் தேர்வு செய்யலாம். பேட்டரிகள் பயன்படுத்தும் சத்தத்தைப் பொருத்தும் செயல்திறன் குறையும்.
சவுண்ட் செக்: ஸ்பீக்கர்கள் நன்றாக உள்ளது என நினைத்து வாங்கி ஏதேனும் ஒலிக்க செய்தால் அது சத்தத்தில் இரைச்சல் மெதுவாக ஏற்பட ஆரம்பிக்கும். இதை ஸ்பீக்கர்கள் வாங்கும் போதே கண்டறியலாம். ஜாஸ் பாடல்களை ஒலிக்க செய்யலாம். இது இரைச்சல் ஏற்படும் பட்சத்தில் அந்த ஸ்பீக்கரை தவிர்கலாம். ஸ்பீக்கர்கள் அனைத்திலும் இதை கண்டறிய முடியாது. அதன் டைனமிக் ரேஞ்ச் அதிக சத்தத்திலும் தெளிவான ஒளியை தர வேண்டும். ஸ்பீக்கர்கள் வடிவத்தை பொருத்தும் கூட சத்தத்தின் அளவு மாறுபடுகிறது.
கனெக்ட்டிவிட்டி: ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் மொபைகளுடன் கனெக்ட் ஆவதில் எவ்வித பிரச்சனையும் இருக்க கூடாது. அதன் வேகமும், மற்றும் ஒலி எழுப்பும் வேகமும் விரைவாக இருக்க வேண்டும். ஸ்பீக்கர்கள் ப்ளூட்டூத் கனெட் செய்வதாக இருந்தாலும், அதில் பென்ட்ரைவ் மூலம் ஒலி எழுப்ப செய்யும் வசதியும் கட்டாயம் இருக்க வேண்டும். World Snake Day 2024: பாம்புகள் பழி தீர்க்குமா? உலக பாம்புகள் தினம்..!
நீர்புகா தன்மை: நீர்புகா தன்மைக் கொண்ட ஸ்பீக்கர்கள் சந்தைகளில் கிடைக்கிறது. மழையிலும், குளிக்கும் போது கூட பயன்படுத்தும் வித்தில் இருக்கிறது. சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும் இதில் அட்வாண்டேஜும் உள்ளது.
போட், ஜேபிஎல், ஜெப்ரானிக்ஸ், சோனி, போட்ரோனிக்ஸ் போன்ற பிராண்டுகள் ப்ளூட்டூத் ஸ்பீக்கர்களை நல்ல தரத்திலும் விலை குரைவாகவும் வழங்கி வருகின்றனர். புளூடூத் ஸ்பீக்கரை பொறுத்தமட்டில் அதனை ரகரகமாக தேர்வு செய்யும் பலரும், அதன் விலையை மலிவாக்க எண்ணுகின்றனர். இதனால் விலை குறைந்த பொருளை வாங்கி, சில மாதங்களில் அதனை குப்பையில் வீசுகின்றனர். அவ்வாறான விஷயத்து இடம் அளிக்காமல், ரூ.100 முதல் 300 க்கு யோசித்து தரமற்ற பொருளை வாங்காமல், தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி பலன் பெறுங்கள்.